Home லைஃப் ஸ்டைல் 1917 – FOREVER … விமர்சனம்!

1917 – FOREVER … விமர்சனம்!

1917-for-ever
1917 for ever

1917 – இது 2019 இல் மூன்று ஆஸ்கார் விருதுகளையும் , 10 நாமினேஷன்களையும் மற்றும் பல பாஃடா விருதுகளையும் இல் தட்டிச்சென்ற ஹாலிவுட் மூவி சோனி லிவ் ( OTT ) வில் ஜுலை 17 முதல் ஒளிபரப்பாகிறது . சாம் மெண்டெஸ் இயக்கத்தில் மெக்கே , டீன் சார்லஸ் நடிப்பில் வெளிவந்த இந்த படம் இன்னும் சில ஆஸ்கார் விருதுகளையும்  மயிரிழையில் இழந்திருக்கிறது …

1917 இல் முத்த உலககப்போரில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது . 2 ஆம் உலகப்போரை மையமாக வைத்து ஏற்கனவே வந்திருந்த ஷேவிங் ப்ரைவேட் ரியான் , டன்கிர்க் போன்ற படங்களை போலவே தரமாக வந்திருக்கும் மற்றுமொரு படம் . பிரிட்டிஷ் – ஜெர்மன் இடையே உக்கிரமாக போர் நடந்து கொண்டிருக்கும் போது பிரிட்டிஷின் ஒரு கேம்பிலிருந்து இன்னொரு கேம்பிற்கு தகவலை சொல்லும் பொறுப்பு இரண்டு வீரர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது . தாக்குதலை நிறுத்த சொல்வதற்கான இந்த தகவல் மூலம் அந்த வீரரின் சகோதரர் உட்பட 1500 வீரர்களை சேதத்திலிருந்து காப்பாற்ற முடியும் . ஜெர்மன் படைகளின் தாக்குதல்களை தாண்டி இந்த ஆபத்தான சவாலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா என்பதை விறுவிறுப்பாக சொல்வதே 1917 .

நேரத்தை வீணடிக்காமல் முதல் சீனிலேயே கதையை தொடங்கி  விடுகிறார்கள் . சகோதரருக்காக ஒரு வீரர் உடனடியாக கிளம்ப மற்றொருவர் முதலில் தயங்குகிறார் ஆனால் கடைசியில் அவரே அந்த மிஷனை முடித்து வைப்பது சிறப்பு . போர் சம்பந்தமான படமென்பதால் குன்டுகள் சத்தத்தால் காதுகளை துளைக்கமால் , தேசப்பற்று வசனங்களால் புழிந்து எடுக்காமல் காட்சிகளின் மூலம் சொல்ல வந்ததை சிம்பிளாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் சொன்ன விதத்தில் இயக்குனரின் உலகத்தரம் தெரிகிறது . போகும் வழியெல்லாம் வீரர்கள் சந்திக்கும் சடலங்களின் வாயிலாக போரின் கொடூரத்தை உணர்த்தியது இயக்குனரின் சாமர்த்தியம் …

இரு வீரர்களும் தடைகளை தாண்டி கடப்பதை விறுவிறுப்பாக சொல்கிறது திரைக்கதை . ஒரு வீரர் மாற்றுவரின் பதக்கத்தை பற்றி ஆர்வமாக கேட்க அவரோ அதை வைத்து சரக்கடித்து விட்டேன் என்று கூலாக சொல்லும் வசனங்கள் சீரியஸான வார் படத்தின் ஹைக்கூ . நடக்கும் வழியில் ஜெர்மன் வீரரால் நேரும் கொடுமை , பாழடைந்த வீட்டில் குழந்தையோடு இருக்கும் பெண்ணிற்கு தனது உணவை கொடுக்கும் வீரரின் பரிவு என எல்லாமுமே ஓவர் டோஸாக இல்லாமல் மனத்தில் பதியும் படி இருப்பது ஹைலைட் …

ஒளிப்பதிவு , சவுண்ட் டிசைன் , விசுவல் எஃ பெக்ட்ஸ் இதற்காக ஆஸ்கார் விருதுகளை தட்டி சென்ற படம் நிச்சயம் கலை , எடிட்டிங்க் , திரைக்கதைக்காகவும் விருதுகளை அள்ளியிருக்கலாம் . ஒரு வார் ஜோனுக்குள் நாம் போய் வந்த உணர்வை கொடுப்பதும் , யாரோ சிலரின் அதிகார பசிக்காக ஏன் பல லட்சம் உயிர்கள் பலியாக வேண்டுமென்கிற கேள்வி வலுவாக எழுவதும் படத்தின் மிகப்பெரிய வெற்றி .

1917 – எக்காலத்துக்கும் பொருந்தும் …

இந்த விமர்சனத்தைய யூடியூபில் காண கீழே சொடுக்கவும் ...

விமர்சனம் : வாங்க ப்ளாக்கலாம் அனந்து

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version