Home சற்றுமுன் சுரங்கப் பாதையில் தேங்கும் நீர்! தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த ஊர்!

சுரங்கப் பாதையில் தேங்கும் நீர்! தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த ஊர்!

IMG-20201101-WA0012

ஆழ்வார் குறிச்சி செங்கனூர் ஊர் சார்பாக மக்கள் எடுத்த முடிவு என்னவென்றால் … எங்களது ஊருக்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து இருந்தார்கள் அதில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் எங்களது மக்களுக்கு கடந்து செல்ல வேறு மாற்று பாதை இல்லை

2019ஆம் ஆண்டு இதே சமயத்தில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதால் நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடினோம் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போராடினோம்

மாவட்ட ஆட்சியர் அவர்கள் தணிக்கை செய்தனர் எங்களுக்கு கண் துடைப்புக்கு ரயில்வே டிராக் அருகாமையில் ஜேசிபி இயந்திரம் மூலம் தற்காலிக பாதை அமைத்து தந்தனர் அதுவும் முழுமையாக அமைக்கவில்லை

மழைக்காலம் தொடங்கிவிட்டதால் எங்களுக்கு மாற்றுப்பாதை எதுவும் இல்லை இரண்டாவதாக சாலை வசதி துப்புரவாக இல்லை

தார் சாலை அமைத்து சுமார் 12 வருடங்கள் உள்ளன இதுவரை எங்களுக்கு அமைத்து தருவதாக கூறி பலமுறை கூறினார்கள் ஆனால் இதுவரை பஞ்சாயத்து நிர்வாகம் ரோடு போடுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை

எங்களோடு பேசும்போதெல்லாம் ரோடுக்கு அல்லோட்மெண்ட் ஆகிவிட்டது சில தினங்களில் தார் சாலையை அமைத்து விடுவோம் என்று கூறி உறுதிமொழி கூறினர் ஆனால் நான்கு வருடங்களாகியும் இன்னும் தார்சாலை அமைக்க வில்லை

ஆறு நிறைய குடிநீர் இருந்தும் எங்களது ஊருக்கு குடிநீர் வசதி இல்லை விவசாய நிலங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லை சுடுகாடு வசதி இல்லை இடுகாடு வசதியில்லை

ஆக மொத்தத்தில் அடிப்படை வசதி இல்லாத ஒரு கிராமம் எங்களது செங்கனூர் கிராமம்

எனவே நாங்கள் 2021 ஆம் ஆண்டு நடக்கின்ற சட்டமன்ற தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்பதை எங்களது ஊர் சார்பாக நாங்கள் அனைவரும் உறுதி எடுத்துள்ளோம்

எனவே அரசியல் கட்சியினர் யாரும் எங்களது ஊருக்குள் வர வேண்டாம் தலையிடவும் வேண்டாம் எங்களது கிராமம் ஒதுக்கப்பட்ட கிராமமாக இருந்து விடட்டும் யாரும் எங்களை சந்திக்க வரவேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

இதைப் பார்க்கின்ற அனைத்து மக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம்..

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version