Home அடடே... அப்படியா? சாமி விக்ரகங்கள் பாதுகாப்பா இருக்குதா? அதுக்காகவேணும் கோயிலுக்கு போய் வரணுமே!

சாமி விக்ரகங்கள் பாதுகாப்பா இருக்குதா? அதுக்காகவேணும் கோயிலுக்கு போய் வரணுமே!

miruthyunjaya homam tenkasi temple

ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி சில இடங்களில் ஆலய வழிபாட்டுக்கும் சுவாமி விக்ரகங்கள் ஆபத்து நேர்ந்திருக்கிறது ஆலயங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் அதிகம் சென்று வராத நிலை ஏற்பட்டுள்ளது பக்தர்கள் எவரும் ஆலயங்கள் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் அங்குள்ள சுவாமி விக்ரகங்கள் நகைகள் பொருள்கள் இவற்றின் நிலைகுறித்து பக்தர்களுக்கு எதுவும் தெரியாத நிலையே உள்ளது இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என்று  பக்தர்கள் பலர் கவலைப்படுகின்றனர்

மதுரை அண்ணாநகரில் அடைக்கப்பட்டுள்ள சேவுக பெருமாள், வேங்கடாசலபதி கோயில்.
மதுரை அண்ணாநகரில் அடைக்கப்பட்டுள்ள சேவுக பெருமாள் வேங்கடாசலபதி கோயில்

 சென்னையில் மயிலாப்பூர் ஆலயத்தில் மிகப் பழமையான  மயில் சிலை மாற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது கண்டறிந்த வரும் ஒரு பக்தர் தான் வழக்கம்போல் மயில் சிலையை தரிசித்து வரும் ஒரு பக்தர் அதன் வாயில் பாம்புக்கு பதிலாக ஏதோ கதிர்  போன்று இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார் அதை வைத்தே அங்கு முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது

 பக்தர்கள் அதிகம் சென்று வந்து நடமாடக் கூடிய நிலையிலேயே ஆலயங்களில் சில அறநிலையத்துறை அதிகாரிகள் துணையுடன் முறைகேடுகள் நடக்கும் போது இப்போது பக்தர்கள் செல்ல முடியாத நிலை இருப்பதால் என்னென்ன முறைகேடுகள் ஆபத்துகள் நிகழுமோ என்று பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர் 

இது போதாதென்று பக்தர்கள் நடமாட்டம் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி கிராமப்புற கோயில்கள் சிலவற்றை மர்ம நபர்கள் சமூக விரோதிகள் வேற்று மதத்தைச் சேர்ந்த நபர்கள் அழிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தில் இதுபோன்று சில சம்பவங்கள் நடைபெற்றிருப்பது பக்தர்களுக்கு ஆலயங்கள் மூடப்பட்டு இருப்பதன் மர்மம் குறித்து கவலை கொள்ள வைத்திருக்கிறது 

கரோனா காலம் என்பதால் அதிகளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்படா விட்டாலும் குறைந்த அளவிலான அல்லது ஊரின் முக்கிய பொறுப்பாளர்கள் சிலரையாவது ஆலயங்களுள் அனுமதித்து ஆலயத்தின் அதே கட்டமைப்பு விக்ரஹங்கள் பொருள்கள் ஆகியவை பத்திரமாக உள்ளனவா என்பதை சோதித்தறிய வழி செய்ய வேண்டும் என்று பலரும் இப்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version