Home சற்றுமுன் TNPSC தேர்வு, புதிய இணையதள விபரம்!

TNPSC தேர்வு, புதிய இணையதள விபரம்!

10 May30 TNPSC

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னரே அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2020-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கால அட்டவணையில் இடம்பெற்ற பல்வேறு தேர்வுகள் கொரோனா ஊரடங்கால் இன்னும் நடத்தி முடிக்கப்படவில்லை. ஏற்கெனவே நடத்தி முடிக்கப்ட்ட தேர்வுகளுக்கும் இன்னும் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

2020 ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்புகள் கடந்த மே மாதமும், இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை செயல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்புகள் ஜூலை மாதமும் வெளியாகி இருக்க வேண்டும்.

இந்த இரண்டு தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வுகால அட்டவணை எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் தான் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த முடியும். கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரசுபணியிடங்களில் 50 சதவீத பணியிடங்கள் மட்டுமே நிரப்ப முடியும். இந்தாண்டு நடத்த இயலாத தேர்வுகள் அனைத்தும் அடுத்த ஆண்டு தேர்வுக்கால அட்டவணையில் சேர்த்து நடத்தப்படும் என்றார்.

மேலும், டி.என்.பி.எஸ்.சி தேர்வின் வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிக்கும் விதமாக, தேர்வர்களுக்கு கூடுதல் சேவைகள் வழங்கும் வகையிலும் தேர்வாணையத்துக்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக தேர்வர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி தங்களது விடைத்தாளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து பார்த்து கொள்ளலாம்.

மேலும், இதற்கு முன் நடத்தி முடிக்கப்பட்ட பழையதேர்வுகளின் கேள்வித்தாள்களும் இணையதளத்தில் இடம்பெறும் என கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version