Home இந்தியா என்ன நாடகம்?! பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பி… அதை தடுப்பது போல்… ஓவைஸி நல்ல முன்னேற்றம்!

என்ன நாடகம்?! பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பி… அதை தடுப்பது போல்… ஓவைஸி நல்ல முன்னேற்றம்!

பெங்களூரில் ஏஐஎம்எம் இஸ்லாமிய கட்சி எம்.பி ஓவைஸி தலைமை தாங்கிய கூட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பி, மேடையில் இளம்பெண் முழங்க, அதை ஓவைஸி தடுப்பது போல் நாடகம் ஆட.. இப்போது அந்த இளம்பெண் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் ஓவைசி கலந்துகொண்டார்! அதில், அமுல்யா என்ற பெண் மேடையில் பேசும் போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டார். அவரை தடுக்க ஓவைசி முயன்றார். ஆயினும் அந்தப் பெண் தொடர்ந்து முழங்கினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. தொடர்ந்து அந்தப் பெண் தனது கோஷத்தை மாற்றி, ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் என்றார். ஆயினும், அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்து மேடையில் இருந்து அழைத்துச் சென்றனர்,

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஒவைஸி,.எங்கள் கருத்து இந்தியா வாழ்க என்பது தான்! அந்தப் பெண்ணின் செயலை கடுமையாக கண்டிக்கிறேன் என்றார்.

இதற்கிடையில் அமுல்யா மீது காவல்துறையினர் ஜாமினில் வெளிவராத பிரிவுகள் மற்றும் தேச துரோக வழக்கினை பதிவு செய்துள்ளனர்! மேலும் அவர் பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிட்ட போது கூடவே சேர்ந்து கத்திய நபர்களையும் வீடியோ பதிவுகள் மூலம் ஆராய்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிய இருப்பதாகக் கூறினர் போலீஸார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அமுல்யா நான் இந்தியாவும் வாழ்க பாகிஸ்தானும் வாழ்க என்றுதானே கூறினேன்! இந்தியா ஒழிக என சொல்லவில்லையே! எனவே என்னை விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், இதற்கு பதில் அளித்துள்ள காவல்துறையினர், அவரது செயலுக்கு தேசத்துரோக வழக்கு நிச்சயம் பதிவு செய்யப்படும் என்றனர்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பலர், முஸ்லிம் மதத்தில் நாட்டுப் பற்று என்பதே கிடையாது, மதப்பற்று மட்டுமே உண்டு என்று கூறி, நாட்டின் தேசிய கீதம் பாடுவதோ, தேசிய கொடியை மதிப்பதோ எங்கள் மதக் கொள்கைக்கு எதிரானது என்று கூறினர். அவர்களது பேச்சுகளால், வெகுஜன நீரோட்டத்தில் இருந்த இஸ்லாமியர்களும் மயங்கி, இதுதான் நம் மதம் சொல்வதோ என்று எண்ணி, அவ்வாறே கடைப்பிடிக்கத் தொடங்கினர். ஆனால் இப்போது, பாகிஸ்தான் ஆதரவை சற்று மறைத்துப் பின்னால் ஒளித்துக் கொண்டு, இந்திய தேசிய கொடியுடன், தேசிய கீதம் பாடுவதும், இந்தியா வாழ்க என கோஷம் போடுவதும் ஊடகங்களில் அதனை காட்டிக் கொள்வதுமாக இருக்கிறார்கள்.

https://dhinasari.com/wp-content/uploads/2020/02/amulya.mp4

இந்நிலையில், அந்தப் பெண் அமுல்யா கூறிய பின்னணி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் அவர் கூறிய போது, இந்த இயக்கத்துக்கென ஒரு ஆலோசனைக் குழு உள்ளது. அவர்கள் சொல்வதன் படியே செயல்படுகிறோம். இதற்கென சிலவற்றை அவர்கள் கொடுத்து விடுவார்கள். கண்டண்ட் டீம் உள்ளது. நாங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் அவர்கள் தயார் செய்து கொடுக்கிறார்கள்…. இது மிகப் பெரிய மாணவர் குழு. மிகப் பெரும் அளவில் போராட்டத்தைச் செய்வோம். அவர்கள்தான் அனைத்தையும் செய்கிறார்கள். முகம் மட்டுமே எங்களுடையது. அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

எனவே, இது முன்கூட்டியே திட்டமிட்ட நாடகமாகவே பார்க்கத் தோன்றுகிறது. ஓவைஸி, பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷத்தைத் தடுப்பது போலும், தாங்கள் இந்தியாவுக்காக வேலை செய்வது போல் காட்டிக் கொள்வதாகவும் மக்கள் மனத்தில் தற்போது பதிய வைக்க இந்த நாடகத்தை அரங்கேற்றியிருப்பதாகவே தோன்றுகிறது.

மேலும், பெங்களூரில் உள்ள மாணவர்கள் இப்போது தயாராகியிருக்கிறோம் என்றும், இது எங்களுக்குக் கொடுக்கப் பட்ட பயிற்சி, முகம் எங்களுடையது, உழைப்பு அவர்களுடையது என்று தனக்குப் பயிற்சி அளித்தவர்கள் குறித்து, அவர் கூறுவது, பின்னணியில் இயங்கும் சதித்திட்டம் குறித்து தெளிவாக்குகிறது. இவர்களுக்குப் பயிற்சி அளிப்பது யார் என்றும் இப்போது சந்தேகம் எழுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version