Home உள்ளூர் செய்திகள் வேலூர் வெற்றிக்கு தென்காசி, செங்கோட்டையில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு!

வேலூர் வெற்றிக்கு தென்காசி, செங்கோட்டையில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு!

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வெற்றிக்காக இனிப்பு கொடுத்து பட்டாசு வெடிக்கும் தென்காசி திமுக.,வினர்

வேலூரில் திமுக., வேட்பாளர் வெற்றி பெற்றதற்காக, நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டையில் அனுமதி இன்றி பட்டாசுகளை வெடித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆக.5ம் தேதி திங்கள் அன்று, நாடு ஒருமைப் பட்ட நிலையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370வது சட்டப் பிரிவை திரும்பப் பெற்று, நமது உரிமை காஷ்மீரை நம் நாட்டின் ஒரு பகுதியாக உறுதிப் படுத்தியதற்கு வரவேற்பு தெரிவித்து, பாஜக.,வினர் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தனர்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வெற்றிக்காக இனிப்பு கொடுத்து பட்டாசு வெடிக்கும் தென்காசி திமுக.,வினர்

நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை பகுதிகளிலும் பாஜக.,வினர் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். அப்போது அவர்கள் வெடி போடுவதற்காக சாலையில் குவிந்த போது, பட்டாசு வெடிக்க போலீஸாரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும், அனுமதி இன்றி பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினர். இதனால் அப்போது பாஜக.,வினர் பட்டாசுகள் வெடிக்காமல், இனிப்புகளை மட்டும் வழங்கினர்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வெற்றிக்காக இனிப்பு கொடுத்து, அனுமதி இன்றி பட்டாசு வெடிக்கும் செங்கோட்டை திமுக.,வினர்

இருப்பினும், தென்காசி, செங்கோட்டை பகுதியில் மத மோதல்கள் ஏற்படும் என்ற காரணத்தைக் கூறி, காஷ்மீர் விவகாரத்தில் அனுமதி இன்றி இனிப்புகள் கொடுத்ததன் பேரில் செங்கோட்டை போலீஸார் பாஜக., மற்றும் இந்து இயக்கத்தினர் 14 பேர் மீது வழக்குகள் பதிவு செய்தனர். அது போல் தென்காசியிலும் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இதற்கு இந்து இயக்கத்தினர் கடும் அதிருப்தியைத் தெரிவித்தனர்.

தென்காசி, செங்கோட்டை பயங்கரவாதிகளின் புகலிடம் ஆகிவிட்டது என்றும், ஹிந்துக்களின் பாரம்பரிய விழாக்களை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் செயல்படும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர் என்றும் குற்றம்சாட்டினர்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வெற்றிக்காக இனிப்பு கொடுத்து, அனுமதி இன்றி பட்டாசு வெடிக்கும் செங்கோட்டை திமுக.,வினர்

இந்த நிலையில்,  வேலூரில் திமுக., வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதற்காக தென்காசி செங்கோட்டை பகுதிகளில் வெடிகள் வெடித்து இனிப்புகள் கொடுத்து இஸ்லாமியர்கள், மற்றும் திமுக.,வினர் திமுக கொடியுடன் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வெற்றிக்காக இனிப்பு கொடுத்து, அனுமதி இன்றி பட்டாசு வெடிக்கும் செங்கோட்டை திமுக.,வினர்

காரணம், அன்று காலை 370வது பிரிவு திரும்பப் பெற்றுக் கொள்ளப் படுவதாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றப் படுவதாகவும் அறிவிப்பு வந்ததும், அதன் பின்னர் மதியத்துக்கு மேல் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் திரண்டு வந்து வாக்களித்ததும், தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கையின் போது, அதிமுக., கூட்டணி வேட்பாளர் முன்னிலை பெற்று வந்தும், கடைசியாக இந்த மூன்று பேரவைத் தொகுதி வாக்குகளில் திமுக., வேட்பாளர் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் பெரிதாகப் பேசப் பட்டது.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வெற்றிக்காக இனிப்பு கொடுத்து, அனுமதி இன்றி பட்டாசு வெடிக்கும் செங்கோட்டை திமுக.,வினர்

இந்நிலையில் இந்து இயக்கத்தினர், தங்கள் மீது போலீஸார் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினர்.

இதை அடுத்து, தங்கள் மீதான குற்றச்சாட்டு தவறு என்றும்,  நெல்லை மாவட்ட காவல்துறை பாரபட்சமின்றி செயல்படுகிறது என்றும் காட்டும் வகையில், அனுமதி இன்றி பட்டாசுகளை வெடித்ததாக திமுக.,வினர் மீது வழக்கு பதிவு செய்ய போலீஸார் தீவிரம் காட்டினர்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வெற்றிக்காக இனிப்பு கொடுத்து, அனுமதி இன்றி பட்டாசு வெடிக்கும் செங்கோட்டை திமுக.,வினர்

செங்கோட்டையில் திமுக., நகரத் தலைவர் ரஹீம் உள்பட 17 பேர் மீது அனுமதியின்றி வெடி வெடித்ததாக நேற்று மாலை செங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது.

அது போல், தென்காசியிலும் இன்று காலை, அடையாளம் தெரியாத நபர்கள் உள்பட, 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக  போலீஸார் கூறியுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version