Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் திருப்புகழ்க் கதைகள்: கைத்தல நிறைகனி..!

திருப்புகழ்க் கதைகள்: கைத்தல நிறைகனி..!

திருப்புகழில் காணப்படும் கதைகள் பகுதி 1

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

கைத்தல நிறைகனி :

 முருகப் பெருமானின் திருவருளைப் பாடிய அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் ஏராளமான புராணக் கதைகள் உள்ளன. அவற்றை காண திருப்புகழை மீண்டும் ஒரு முறை படிக்கலாமா? திருப்புகழின் முதல் பாடல் கைத்தலம் நிறைகனி எனத் தொடங்கும் விநாயகர் துதியாகும்.

இந்த திருப்புகழில் வரிக்கு வரி புராணக் கதைகள் உள்ளன என்றால் மிகையாகாது. இனி பாடலைப் பார்ப்போம்.

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக …… னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை …… கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய …… மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய …… முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த …… அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை …… இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் …… பெருமாளே.

கைத்தலம் நிறை கனி என்ற வரியில் ஒருகதை; கரிமுகன் என்ற சொல்லில் ஒரு கதை; முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே என்ற வரியில் ஒரு கதை; முப்புரம் எரி செய்தஅச் சிவன் உறை ரதம்அச்சு அது பொடி செய்த அதி தீரா என்ற வரியில் ஒரு கதை; இபம் ஆகி அக் குறமகளுடன் அச் சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமானே என்ற வரியில் ஒரு கதை; மத்தமும் மதியமும் வைத்திடுமரன் என்ற வரியில் ஒரு கதை என பல கதைகள் உள்ளன. இனி… ஒவ்வொன்றாய் காணலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version