Home இந்தியா ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த வங்கி முறையின் புதிய மாற்றங்கள்!

ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த வங்கி முறையின் புதிய மாற்றங்கள்!

2020 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த வங்கி முறையின் புதிய மாற்றங்கள் இவை…!

மேக்னடிக் ஏடிஎம் -டெபிட் கார்டுகள்

2020-ஆம் ஆண்டு, ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கி முறையில் பல்வேறு மாற்றங்களும் புதிய விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன.

பொதுவாக, அனைத்து வங்கிகளுமே வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம்-டெபிட் கார்டுகளை வழங்கியுள்ளன. ஆனால் ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, பழைய மேக்னடிக் டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதால், இப்போது இஎம்வி சிப் பொருத்தப்பட்ட டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி வருகின்றன.

தற்போது வாடிக்கையாளர்கள் மேக்னடிக் டெபிட் கார்டுகளை வைத்திருந்தால், இன்று முதல் அந்த கார்டுகளின் செயல்பாடு ரத்து செய்யப்படும்.

அவ்வாறு பழைய மேக்னடிக் டெபிட் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை அணுகி சிப் பொருத்தப்பட்ட டெபிட் கார்டுகளை எவ்விதக் கட்டணமும் இன்றி பெற்றுக் கொள்ளலாம்.

என்இஎப்டி(NEFT) கட்டணம் தள்ளுபடி!

அனைத்து வங்கிகளும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நெஃப்ட் – என்இஎப்டி வழியாக வாடிக்கையாளர்கள் பணம் அனுப்பும்போது வசூலிக்கப்படும் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு இருந்தது. இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

ரூபே, யுபிஐ கட்டணம் 2020-ஆம் ஆண்டு முதல் ரூபே மற்றும் யுபிஐ செயலி மூலம் வர்த்தகர்கள் பணப் பரிமாற்றம் செய்தால், வர்த்தகர்களுக்கு வசூலிக்கப்படும் எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்படாது என்று நிதியமைச்சகம் அறிவித்திருந்தது.

ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கு உள்ளாக விற்று முதல் செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூபே, யுபிஐ மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை அளிப்பது கட்டாயம் என அறிவித்திருந்தது!

எஸ்பிஐ., வங்கியின் ஓடிபி வழி ஏடிஎம் பணம் எடுத்தல்

எஸ்பிஐ வங்கி தங்கள் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பாதுகாப்பாக பணம் எடுக்க வேண்டும் என்பதற்காக விதிமுறைகளைப் பலப்படுத்தியுள்ளது.

இதன்படி, இரவு 8 மணிக்கு மேல் எஸ்பிஐ வங்கி வாடிக்கை யாளர்கள், எஸ்பிஐ ஏடிஎம்களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்தால், அவர்களின் செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் வரும். அந்த எண்ணை ஏடிஎம் இயந்திரத்தில் பதிவு செய்தால் தான் பணம் எடுக்க முடியும் என்ற வழிமுறையை ஏற்படுத்தியுள்ளது.

இது ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் இந்த விதிமுறை பொருந்தாது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version