― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ஒரு நாள்கூட ஓய்வே இல்லாமல்... மக்கள் சேவையில் 20ஆம் ஆண்டில்... பிரதமர் மோடி!

ஒரு நாள்கூட ஓய்வே இல்லாமல்… மக்கள் சேவையில் 20ஆம் ஆண்டில்… பிரதமர் மோடி!

modi2001

பிரதமர் மோடியின் மக்கள் சேவைப் பணியில் மேலும் ஒரு சாதனை.. முதலமைச்சராக, பிரதமராக என ஒரு நாள் கூட ஓய்வு இன்றி, தொடர்ந்து 20ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் பிரதமர் மோடி..! இதனை சமூகத் தளங்களில் பலரும் பாராட்டி வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

முதலமைச்சர், பிரதமர் பதவிகளில் எந்த இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து 19 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார் பிரதமர் மோடி! இன்று அந்த சதனையின் மைல்கல்லாக, தமது அதிகார மிக்க பொதுவாழ்வின் 20வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார். இது அவரது அரசியல் வாழ்வில் ஒரு முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

2001 அக்டோபர் 7ம் தேதி முதன்முறையாக குஜராத் மாநில முதலமைச்சராக பதவியில் அமர்ந்த மோடி, தொடர்ந்து 2002, 2007 மற்றும் 2012 ல் மூன்றாம் முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

modi2014

மூன்றாம் முறையாக முதலமைச்சராக இருந்த போது, 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்று நாட்டின் 14வது பிரதமரானார். 2019ல் இரண்டாவது முறையாகவும் பிரதமரான மோடி இதன்மூலம் மக்கள் சேவையில் இன்று (அக்டோபர் 7) 20வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

அதுவும் இடைவெளியின்றி இத்தனை ஆண்டுகள் அதிகார மிக்க பதவியில், பொது வாழ்வில் இருந்தது மோடியின் வாழ்வில் புதிய மைல்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியது ,காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது, முத்தலாக் தடை, ஆத்மா நிர்பார் பாரத், சீனா உடனான எல்லைப் பிரச்சினையில் தக்க பதிலடி கொடுத்து வருவது, விவசாயத்துறையில் மாற்றம் ஏற்படச் செய்யும் வகையில் மூன்று வேளாண் மசோதாக்களை சட்டமாக்கியது உள்ளிட்ட பல்வேறு சிறப்புமிக்க விஷயங்களை பிரதமர் மோடி தனது ஆட்சியில் செய்து முடித்துள்ளார்.

இன்னும் நிறைய நிறைய சாதனைகளை சொல்லிக்கொண்டே செல்லலாம்… பல நூறு ஆண்டுகளாக நீடித்த பிரச்சினைகளையும் பிரதமர் மோடி தீர்த்து வைத்துள்ளார்~இவர் இந்தியாவின் மிகச்சிறந்த பொக்கிஷமாக உலகின் தலைசிறந்த பொக்கிஷமாக இந்திய மக்கள் கருதுகின்றனர் உலக நாடுகளும் இதையேதான் சொல்லி வருகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version