― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்சோழவந்தான் அருகே, முத்தையா சாமி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!

சோழவந்தான் அருகே, முத்தையா சாமி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!

IMG 20240523 WA0018
#image_title

சோழவந்தான் அருகே, மன்னாடி
மங்கலம் அருள்மிகு ஸ்ரீ முத்தையா சாமி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் கிராமம் கல்லாங்காடு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தையா சாமி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு ,கடந்த 22 ஆம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு முதல் கால யாக வேள்வி, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

தொடர்ந்து, இரவு 9 மணி அளவில் கணபதி ஹோமம், நடைபெற்று 21 பந்தி தெய்வங்களின் ஹோமம் மற்றும் பரிகார தேவதை ஹோமங்கள் மகாபூர்ணாகதி நடைபெற்று மகா தீபாராதனையுடன் முதல் காலையாக பூஜை நிறைவு பெற்றது. தொடர்ந்து , இன்று காலை மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை தொடங்கி, கோமாதா பூஜை, கன்னியா பூஜை, பூஜையுடன், முத்தையா சாமிக்கு 21 பந்தி தெய்வங்கள் மற்றும் பரிவார தெய்வங்களின் விசேஷ மூலிகை ஹோமங்கள் பூஜையுடன் மகாபூர்ணாகதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, காலை 9 . 35 மணிக்கு முத்தையா சாமி மாரியம்மன் கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், சோழவந்தான் தொழிலதிபர் பாஜக விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் எம். வி. எம். மணி முத்தையா, சோழவந்தான் பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் வள்ளி மயில், 8-வது வார்டு கவுன்சிலர் அரிமா சங்கத் தலைவர் டாக்டர் எம் மருது பாண்டியன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை, எம். வி.எம். குடும்பத்தினர் தொடங்கி வைத்தனர். கும்
பாபிஷேகத்திற்கான பூஜைகள் அனைத்தும் சோழவந்தான் ஸ்ரீ வே வரதராஜ் பன்டிட்ஜி தலைமையில் அர்ச்சகர்கள், யாக வேள்வி மற்றும் பூஜைகள் செய்தனர்.

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி திருவிழா மகாபாரதத்தில் வரக்கூடிய கதைக்கேற்ப பாத்திரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வும் நடந்தது.பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு காலை வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பூக்குழி மைதானத்தில் தெளித்தனர்.பின்னர் பூ வளர்த்தனர்.

பகல் 2 மணியளவில் அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பூக்குழி மண்டகப்படியில் வந்து சேர்ந்தது.அங்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலை 6 மணியளவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி மற்றும் பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.

இதில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் வக்கீல் சத்திய பிரகாஷ், கவுன்சிலர் மருதுபாண்டியன், சங்கோட்டை கிராம நல சங்க தலைவர் வக்கீல் சிவகுமார் ,செயல் தலைவர் முத்துப்பாண்டி, செயலாளர் சேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அம்மன் சங்கங்கோட்டைகிராமம்,முதலியார்கோட்டை கிராமம்,ரயில்வேபீடர்ரோடு வழியாக மார்க்கெட் ரோடு,நான்குரதவீதி பவனி வந்து கோவிலை வந்தடைந்தது. சங்கங்கோட்டை கிராமத்தார்கள் பூக்குழி திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும்தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version