
மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக தமிழக பாஜக., மூத்த தலைவர் இல.கணேசன் பதவியேற்றுக் கொண்டார்.
மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதை அடுத்து சிக்கிம் மாநில ஆளுநர் கங்கா பிரசாத் சௌராஸியா கூடுதல் பொறுப்பாக மணிப்பூரையும் கவனித்து வந்தார்.
இந்நிலையில், மணிப்பூர் மாநில ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த பாஜக., மூத்த தலைவர் இல.கணேசனை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.
இதை அடுத்து, மணிப்பூர் மாநிலத்தின் 17வது ஆளுநராக இல.கணேசன் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவரது பதவி ஏற்பு விழாவுக்கு தமிழகத்தில் இருந்து முக்கியப் பிரமுகர்கள், அவரது நண்பர்கள் சிலர், தமிழக பாஜக., மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.