சிவலிங்கத்தைக் கட்டியபடி கருவறையிலேயே உயிரிழந்த அர்ச்சகர்!

ஆந்திர மாநிலத்தில் பீமாவரம் பகுதியில் உள்ளது புகழ்பெற்ற சோமேஸ்வரர் ஜனார்த்தன ஸ்வாமி கோவில். இங்கே தலைமை அர்ச்சகராக பணிபுரிந்து வந்வர் 68 வயதான கந்துகூரி வேங்கட ராமா ராவ். இவர், வழக்கம்போல் கோவிலை திறந்து பூஜை செய்துள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் சிவலிங்கத்தின் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்த சிசிடிவி காட்சிகள், ஆந்திர மாநிலத்தில் சமூக ஊடகங்களில் பரவி வைரலாயின.

திங்கள் கிழமை காலை சோமவாரத்தில் காலை பூஜை செய்து கொண்டிருந்த போது, அவர் மயங்கிச் சரிந்து, சிவலிங்கத்தின் மீதே கட்டியபடி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிர் ஏற்கெனவே பிரிந்துவிட்டதாகக் கூறினர்.