திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 107 வது நினைவு தினம் இன்று காலை 10.31க்கு அனுசரிக்கப் பட்டது.
இதை முன்னிட்டு மாவட்ட வருவாய் அதிகாரி முத்துராமலிங்கம் செங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள வாஞ்சிநாதன் உருவக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், தாலுகா அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வாஞ்சிநாதன் நினைவு மண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
செங்கோட்டை நகர இந்து முன்னணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், பிராமண சங்கம் ஆகியவற்றின் சார்பிலும் வாஞ்சி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.





