Home Reporters Diary நிவாரணப் பொருள்களைப் பெற்றுக் கொண்டு… அமைச்சரைப் பாராட்டிய பொதுமக்கள்!

நிவாரணப் பொருள்களைப் பெற்றுக் கொண்டு… அமைச்சரைப் பாராட்டிய பொதுமக்கள்!

உலகை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் கரூர் மாவட்ட மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை கரூர் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மேற்கொண்டுவருகிறார்.

அவரது துரித நடவடிக்கைகளின் பலனாக கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.. மேலும் மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தியும் கானகத்தில் கரூர் என்ற கொள்கையில் துவங்கப்பட்ட எம்ஆர்வி_ட்ரஸ்ட் மூலம் அறிவிக்கப்பட்ட அலைபேசி எண்கள் மூலமாக தொடர்பு கொண்ட கரூர் மக்களுக்கு சுமார் 300க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மூலமாக நேரடியாக அவர்களது வீட்டிற்கே சென்று அவர்கள் கேட்கும் பொருட்களை வழங்கி பேருதவி புரிந்தனர்!!

2.38 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அமைச்சர் தமது சொந்த செலவில் வழங்கப்பட்ட தரமான நிவாரண பொருட்களை வீடுவீடாக கொண்டு சேர்த்ததிலும் பெரும் பங்காற்றினர்..

இவ்வாறு களப் பணியாற்றிய தன்னார்வலர்கள் அனைவரையும்
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டார்..

பின்னர், அனைத்து தன்னார்வலர்களும் பொதுமக்களிடம் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், பொதுமக்கள் தமிழக அரசின் செயல்பாடுகளையும் அமைச்சரின் மக்கள் பணியையும் வெகுவாக பாராட்டியதாக கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version