― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஏழைகளின் உயிர் காத்து சேவையாற்றிய 10 ரூபாய் டாக்டர்... கொரோனாவுடன் போராடி காலமானார்!

ஏழைகளின் உயிர் காத்து சேவையாற்றிய 10 ரூபாய் டாக்டர்… கொரோனாவுடன் போராடி காலமானார்!

- Advertisement -
ten rupee doctor passes away
  • ஏழைகளின் உயிர் காத்து சேவையாற்றிய 10ரூ டாக்டர் சென்னையில் காலமானார்.
  • கொரோனாவோடு வீரத்தோடு போராடி சுவாசக்கோளாறு காரணமாக புதன்கிழமை காலை மரணமடைந்தார்.

டாக்டர் சி மோகன் ரெட்டி (84) ஏழை நோயாளிகளிடமிருந்து ஆலோசனைக்காக ரூ .10 மட்டுமே வசூலித்தார். மேலும் பல வெளிநோயாளிகளுக்கு இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தன் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார்.

கோவிட் -19 க்கு எதிராக துணிச்சலான போரை நடத்தி நகரத்தின் ‘ரூ .10 மருத்துவர்’ புதன்கிழமை அதிகாலை சுவாசக் கோளாறு காரணமாக மரணமடைந்தார்.

ஏழைகளுக்குச் செய்யும் இலவச சிகிச்சை மற்றும் சேவைகளால் நன்கு அறியப்பட்டவரான டாக்டர் சி மோகன் ரெட்டி (84) ஏழை நோயாளிகளின் நண்பராக விளங்கினார்.

டாக்டர் ரெட்டி ஜூன் 25 அன்று கோவிட் -19 க்கு கெய்துகொண்ட பரிசோதனையில் பாசிடிவ் வந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

dr c mohan reddy

“அவர் சில நாட்களுக்குப் பிறகு குணமடைந்துவிட்டார். இருப்பினும், புதன்கிழமை, அவர் திடீரென சுவாசக் கோளாறு காரணமாக இறந்தார், ’’ என்று அவருடைய சகோதரர் டாக்டர் சி.எம்.கே ரெட்டி தெரிவித்தார்.

மருத்துவர் ரெட்டி யின் மரணச் செய்தி பரவியபோது, ​​வில்லிவாக்கம் மற்றும் சுற்றுப்புறம், குறிப்பாக சேரிப் பகுதிகள் மீது துயர இருள் விழுந்தது.

“டாக்டர் ரெட்டி நோயாளிகளால் செலவுகளை தாங்க முடியாது என்று நினைத்தால் இலவசமாக சிகிச்சையளிப்பார்” என்று டாக்டர் ரெட்டியின் மருத்துவமனை செவிலியர் ஒருவர் கூறினார்.

1936 ல் நெல்லூரில் பிறந்த டாக்டர் ரெட்டி தனது ஆரம்பக் கல்வியை குடூரில் பெற்றார். பின்னர் கில்பாக் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். ரயில்வேயில் மருத்துவராக சிறிது காலம் பணியாற்றிய பின்னர், வில்லிவாக்கத்தில் மோகன் நர்சிங் ஹோம் தொடங்கினார்.

30 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை அதைச் சுற்றியுள்ள ஏழை மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கியது.

தனது வாழ்நாள் முழுவதும் ஒரு பிரம்மசாரியாக தன் மருத்துவமனையிலேயே வாழ்க்கையைக் கழித்தார்.

அதனால் எந்த நேரத்தில் யாரும் சிகிச்சையை இழக்கவில்லை. “நாங்கள் அவரை வீட்டிற்கு வந்து ஊரடங்கின் போது எங்களுடன் தங்கச் சொன்னோம், ஆனால் அவரோ, ” “நான் வெளியேறினால் நோயாளிகளுக்கு யார் அங்கு இருப்பார்கள்?” என்று சகோதரர் டாக்டர் சி.எம்.கே ரெட்டி நினைவு கூர்ந்தார்.

“எங்கள் தாயார்கூட ஏழைகளுக்காகவே வாழ்ந்தார். அவரது முதுமை காலத்தில்கூட அவர் ஏன் மற்றவர்களுக்கு உதவ இவ்வளவு சிரமப்படுகிறார் என்று நான் அடிக்கடி தாயாரிடம் கேட்பேன். மற்றவர்களுக்கு உதவ முடியாவிட்டால், இன்னும் இரண்டு வருடங்கள் வாழ்ந்ததன் பயன் என்ன என்று என்னிடம் கேட்பாள். என் சகோதரர் அவளது அடிச்சுவடுகளைப் பின்பற்றினார்” என்று அவர் மேலும் கூறினார்.

டாக்டர் ரெட்டி, ஜூன் 23 அன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு, லாக்டௌனால் பாதிக்கப்பட்ட பல வறியவர்களுக்கு உணவு விநியோகித்தார்.

தன்னிடம் உதவி கேட்டு அணுகிய யாரிடமும் அவர் ஒருபோதும் இல்லை என்று சொன்னதில்லை என்று சி.எம்.கே.ரெட்டி கூறினார்.

“அவர் இப்பகுதியில் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் அனாதை இல்லங்களுக்கு பணத்தை நன்கொடையாக வழங்கினார்,” என்று அவர் மேலும் கூறினார்.

டாக்டர் ரெட்டியின் பல தசாப்த கால சேவையை நினைவு கூர்ந்த அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கல்யாணம் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ரெட்டி பெரும்பாலும் வில்லிவாக்கத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் பள்ளிகளுக்கும் நன்கொடைகளை வழங்கினார் என்று கூறினார். அவரது பரோபகார சேவைகளுக்காக, டாக்டர் ரெட்டியை அப்போதைய தமிழக ஆளுநர் கே ரோசயா பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version