Home அடடே... அப்படியா? செப்டம்பர் 7 முதல் பட்ஜெட் விலையில்.. டெக்னோ ஸ்பார்க் கோ 2020! அம்சங்கள்..!

செப்டம்பர் 7 முதல் பட்ஜெட் விலையில்.. டெக்னோ ஸ்பார்க் கோ 2020! அம்சங்கள்..!

sparkgo-2020

ரூ.7000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் ஸ்பார்க் கோ 2020 ஸ்மார்ட்போன் இந்தியா அறிமுகமானது. பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்.Tecno Spark Go 2020ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான டெக்னோ நிறுவனம் ஒருவழியாக தனது புதிய பட்ஜெட் சென்ட்ரிக் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் கோ 2020 என்று அழைக்கப்படும் இந்த புதிய ஸ்மார்ட்போன் சில சுவாரஸ்யமான விலையை மீறிய அம்சங்களுடன் வருகிறது.

டெக்னோ ஸ்பார்க் கோ 2020 இந்தியாவில் ரூ.6,499 என்கிற விலை நிர்ணயத்தின் கீழ் அறிமுகமாகி உள்ளது.

இது ஐஸ் ஜேடைட் மற்றும் அக்வா ப்ளூ என்கிற இரண்டு வண்ணங்களில் வாங்க கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் வருகிற செப்டம்பர் 7 முதல் விற்பனைக்கு வரும், மேலும் இதுபிரபல இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.

அம்சங்களை பொறுத்தவரை, புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 2020 ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் அளவிலான எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.இது 1500 x 720 பிக்சல்கள் ஸ்க்ரீன் ரெசல்யூஷனுடன் 480 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 1.8GHz குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ 20 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஏற்றப்பட்டுள்ளது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை விரிவாக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேமரத்துறையை பொறுத்தவரை, டெக்னோ ஸ்பார்க் கோ 2020 ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 13 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா (எஃப் / 1.8 லென்ஸ்) + இரண்டாம் நிலை கேமராவாக ஏஐ லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷனின் கீழ் HiOS 6.2 உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வருகிறது.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இது டூயல் சிம், டூயல் 4ஜி VoLTE, வைஃபை 802.11 பி / ஜி / என் (2.4GHz), ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்றவைகளை கொண்டுள்ளது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version