Home கிரைம் நியூஸ் இளம்பெண்ணை மானபங்கப் படுத்த முயற்சி: விஏஓ மீது ஆட்சியரிடம் புகார்!

இளம்பெண்ணை மானபங்கப் படுத்த முயற்சி: விஏஓ மீது ஆட்சியரிடம் புகார்!

madurai-ladies-complaint-to-collector
madurai ladies complaint to collector
  • மதுரையில் விஏஓ தன்னை மானபங்கப் படுத்த முயன்றதாக கூறி இளம்பெண் தற்கொலை முயற்சி
  • விஏஓ மீது ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
  • பதவி நீக்கம் செய்ய கோரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு

மதுரை துவரிமான் அருகேயுள்ள இந்திராகாலனி பகுதியை சேர்ந்த அன்னலெட்சுமி என்ற இளம்பெண் தனது கணவருடன் வசித்துவருகிறார். அவரது வீட்டின் அருகே வாடிப்பட்டி தாலுகா கீழசின்னம்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியகூடிய திலீபன் என்பவர் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22- ஆம் தேதி திலீபனின் வீட்டில் உள்ள பசுவானது அன்னலெட்சுமியின் வீட்டிற்குள் சென்றுள்ளது.

அது குறித்து திலிபனிடம் புகாராக சொன்னபோது விஏஓ திலீபன் மற்றும் அவரது குடும்பத்தினர் அன்னலெட்சுமியின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, மானபங்கபடுத்த முயன்றதால் மனமுடைந்த அன்னலெட்சுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதையடுத்து அருகில் உள்ளவர்கள் காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அன்னலெட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, மானபங்கபடுத்த முயன்றதாகவும், மேலும் இது குறித்து கேட்டபோது , கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து புகார் மனு அளித்தனர். பெண்களிடம் தகாத முறையில் செயல்பட்ட விஏஓவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும், அவரது குடும்பத்தினரை கைது செய்ய கோரியும் கோரிக்கை மனு அளித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version