Home உலகம் பிரபல ஜேம்ஸ் பாண்ட் நடிகர் சீன் கானரி காலமானார்!

பிரபல ஜேம்ஸ் பாண்ட் நடிகர் சீன் கானரி காலமானார்!

246rt65o_james-bond-actor-sir-sean-connery-650_625x300_31_October_20
பிரபல ஜேம்ஸ் பாண்ட் நடிகர் சீன் கானரி காலமானார்

பிரபல ஜேம்ஸ் பாண்ட் நடிகர் சீன் கானரி காலமானார்.

ஸ்காடிஷ் நடிகர், ஜேம்ஸ்பாண்ட் புகழ் சீன் கானரி 90 வயதில் சனிக்கிழமையன்று காலமானார். உலகளவில் மிகவும் புகழ் பெற்ற ஜேம்ஸ்பாண்ட் தொடரைச் சேர்ந்த ஏழு படங்களில் சீன் கானரி நடித்துள்ளார்.

முதல் முறையாக 1962 ல் வெளிவந்த பாண்ட் தொடர்கள் ‘டா நோ’ திரைப்படத்தில் ஜேம்ஸ்பாண்டாக நடித்தார். அதன்பிறகு 1963 ல் வந்த ஃப்ரம் ரஷ்யா வித் லவ்,
1964 ல் வந்த கோல்டு ஃபிங்கர், 1965 ல் வந்த தண்டராபால், 1967 ல் வந்த யூ ஒன்லி லிவ் ட்வைஸ், 1971 ல் வந்த டைமண்ட்ஸ் ஆர் ஃபாரெவர், 1983 ல் வந்த நெவர் சே நெவர் எகைன் போன்ற வரிசையான ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் அவர் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தார்.

1987ல் வந்த தி அன்டசபுல்ஸ் படத்தில் ஐரிஷ் போலீஸ் பாத்திரத்தில் நடித்ததற்காக சீன் கானரிக்கு ஆஸ்கார் அவார்ட் கிடைத்தது.

அதே போல் பல படங்களில் நடிப்பிற்கு இருமுறை கோல்டன் குளோப்ஸ் அவார்டோடு கூட இருமுறை பாஷ்டா அவார்டுகளும் பெற்றார்.

சீன் கானரி, தன்னுடைய நடிப்பு பயணத்தில் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற படங்களோடு கூட பல கமர்ஷியல் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகராக உயர்ந்த இடத்தை பிடித்த சீன் கானரியின் இளமைப் பருவம் மிகவும் பரிதாபமான சூழ்நிலையிலேயே கழிந்தது. ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்கில் மிக மிக ஏழ்மையில் அவர் வளர்ந்தார். முதலில் இறந்த உடல்களை வைக்கும் பெட்டியை பாலிஷ் செய்யும் பணியில் ஈடுபட்டார். அதன்பிறகு பால் வியாபாரியாக, நீச்சல் குளத்தில் லைஃப் கார்டாக பணிபுரிந்தார்.

அதன் பிறகு பாடிபில்டிங் மீது பார்வையை செலுத்தினார். அதுவே அவருடைய திரைப் பயணத்திற்கு பாதை வகுத்தது. மிகச்சிறு காலத்திலேயே ஹாலிவுட்டில் நல்ல பெயரும் புகழும் பெற்றார்.

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் மட்டும் இன்றி புகழ்பெற்ற இயக்குனர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் இயக்கத்தில் வந்த மார்னி (1964), கேண்டிஸ் பெர்ஜின் இயக்கத்தில் வந்த தி விண்ட் அண்ட் லயன் (1975), ஜூன் ஹூஸ்டன் இயக்கத்தில் வந்த தி மேன் ஹூ வுட் பி கிங் (1975), ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில் வந்த இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி லாஸ்ட் க்ரூசேட் (1989), மற்றும் பல படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version