Home அடடே... அப்படியா? 2015 துயரம் மீண்டும் ஏற்படுமா?! பஞ்சாங்க பயமுறுத்தலை அடுத்து… வானிலை ஆய்வு மைய தகவல்!

2015 துயரம் மீண்டும் ஏற்படுமா?! பஞ்சாங்க பயமுறுத்தலை அடுத்து… வானிலை ஆய்வு மைய தகவல்!

panchangam
panchangam

2015 இல் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் போன்ற துயரம் இந்த வருடம் மீண்டும் ஏற்படக்கூடும் என்று பஞ்சாங்க தகவல்கள் பயமுறுத்தியது போல் இப்போது வானிலை ஆய்வு மையம் கனமழை குறித்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது 

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டிருக்கும் தகவலில்,  தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிச.1 முதல் டிச.3ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது… என்று குறிப்பிட்டிருக்கிறது.  

07 July10 Chennai floods

வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி கரையைக் கடந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளது, கடந்த 2015ம் வருட சூழலை மீண்டும் நினைவூட்டியிருக்கிறது. 

முன்னதாக, பஞ்சாங்கத் தகவல்களில் ஜோதிட ரீதியாக, வருகின்ற 04.12.2020 அன்று மீண்டும் 2015 ல் நடந்த சென்னை பெருவெள்ளம் நிகழ வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டு, ஒரு தகவல் சமூகத் தளங்களில் வைரலானது. 

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகம் முழுவதும் மழை தீவிரம் அடைந்துள்ளது. தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டில் பெரும் வெள்ளச் சேதம் ஏற்படக் காரணமாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரி இப்போது நிரம்பிவிட்டது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் தற்போது அடித்த நிவர் புயலால்  நிரம்பி வழிகின்றன இந்த புயலானது தமிழகத்தில் ஒரு காட்டு காட்டி மழையை பெய்துவிட்டு ஆந்திரத்தில் இப்போது கன மழையாக பெய்து வருகிறது 

ஆந்திராவில் பெய்து வரும் கன மழையால், அங்குள்ள அம்மப்பள்ளி அணை நிரம்பியுள்ளது. அதிலிருந்து உபரி நீர் கொற்றலை ஆற்றின் வழியாக, பூண்டி ஏரிக்கு வரத் தொடங்கியுள்ளது. 

cyclone nivar

இப்படி பூண்டி புழல் செம்பரம்பாக்கம் என ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில் அதிலிருந்து தற்போது போல் மேலும் அதிக அளவு நீர் திறந்துவிடப்படலாம் என்று கூறப் படுகிறது. இதனை வைத்து, 2015ம் ஆண்டை போல வெள்ள அபாயம் ஏற்படும் என்ற தகவல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

தற்போது ஈக்காட்டுத்தாங்கல்  பகுதியில் அடையாறு ஆற்றின் குறுக்கே இருந்த பழைய பாலம் நீக்கப்பட்டு தண்ணீர் தேங்குவது பெருமளவில் குறைக்கப்பட்டது 2015 இல் இந்த பழைய பாலத்தில் சேர்ந்த கழிவுகள் கால்வாயை அடைத்துக்கொண்டு நீர் தேங்கியது அத்தகைய சூழ்நிலை இப்போது இல்லை எனவே தண்ணீர் எவ்வளவு திறந்து விட்டாலும் உடனே ஓடிச் சென்று விடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர் 

அதற்கு ஏற்ப தற்போது நிவர் புயலை ஒட்டி பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்தது. ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டிய போது  ஏரியிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டது கடந்த 2015இல் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது அடையாறு ஆற்றின் கரையோரம் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இந்த முறை 8000கன அடி வரை நீர் திறந்து விடப்பட்ட போதும் உடனடியாக வடிந்து நீர் சென்றுவிட்டது எனவே 2015 போன்ற வெள்ளப்பெருக்கு சென்னை நகருக்குள் ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் இருந்தபோதும் பஞ்சாங்க தகவல்களை காட்டி சிலர் பயமுறுத்தத் தான் செய்கின்றனர்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version