Home அடடே... அப்படியா? கல்யாணராமனை உடனே விடுதலை செய்ய வேண்டும்: அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

கல்யாணராமனை உடனே விடுதலை செய்ய வேண்டும்: அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

arjunsampath
arjunsampath

கல்யாணராமன் கைதுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவிப்பதாகவும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி அவர்களை‌ இழிவுபடுத்தி அவதூறு செய்து SDPI, மற்றும்‌ PFI இசுலாமிய பயங்கரவாத அமைப்புக்கள் சுவரொட்டிகள்‌ மற்றும் பேசியதை கண்டித்து நடந்த கூட்டத்தில் கல்யாணராமன் அவர்கள் பேசினார்

திரு கல்யாணராமன் பேச ஆரம்பித்த பொழுது அதில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கண்ட இசுலாமிய‌ பயங்கரவாத அமைப்புக்களின் குண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து பிரச்சனை செய்துள்ளனர்.

kalyanaraman

ஆனால் காவல்துறை அந்த பயங்கரவாதிகளை அகற்றவோ அல்லது அவர்களை கைது செய்யவோ துளி கூட யோசிக்கவில்லை, மாறாக அவர்களிடத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தது.

இந்நிலையில் கூட்டம் முடிந்து ஒரு இல்லத்தில் உணவருந்திக் கொண்டிருந்த கல்யாணராமனைக் கைது செய்து இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புக்களை திருப்தி செய்வதை மீண்டும் நிரூபித்துள்ளது கோவை மாவட்ட காவல்துறை.

அனுமதி பெறப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அத்துமீறிய இசுலாமிய பயங்கரவாதிகளை கைது செய்யாத காவல்துறை, பிரதமர் மோடி அவர்களை இழிவாகப் பதிவிட்ட இசுலாமிய பயங்கரவாதிகளை கைது செய்யாத காவல்துறை கல்யாணராமனை மட்டும் கைது செய்ததில் இருக்கும் மர்மம் என்ன?!

உடனடியாக கல்யாணராமனை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசையும், காவல் துறையையும் கேட்டுக்கொள்கிறேன், போராட்டத்தை நீங்களே தூண்டாதீர்கள், இந்து விரோத செயல்களுக்கு துணை போகாதீர்கள்.

பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், முன்னாள் நகர்மன்ற தலைவர் சதீஷ் அவர்களையும் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்!

ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு உள்ள தமிழக காவல்துறையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள இந்து தலைவர்கள் கல்யாணராமன், சதீஷ் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும் தமிழகம் முழுக்க இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஜனநாயக வழியில் அறப் போராட்டங்கள் நடைபெறும்.. என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் சமூகத் தளங்களிலும் எதிரொலித்தது. கல்யாணராமனுக்கு ஆதரவாக டிவிட்டர் பதிவுகளில் சிலர் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். #Isupportkalyanaraman என்ற டிவிட்டர் ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

https://twitter.com/Scorpion1033/status/1356144556442415109

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version