Home அடடே... அப்படியா? டிவிட்டரில் ட்ரெண்ட் ஆன #AntiTerrorismDay – பயங்கரவாத எதிர்ப்பு தினம்!

டிவிட்டரில் ட்ரெண்ட் ஆன #AntiTerrorismDay – பயங்கரவாத எதிர்ப்பு தினம்!

antiterrorismday
antiterrorismday

டிவிட்டரில் இன்று பயங்கரவாத எதிர்ப்பு தினம் என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டானது.

பிப்.5 இன்று பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப் படுகிறது. இதை அடுத்து, இந்தியர்கள் பலரும் தங்கள் டிவிட்டர் பதிவுகளில் #AntiTerrorismDay – பயங்கரவாத எதிர்ப்பு தினம் என்பதை பதிவிட்டு, ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

இதே நாளில் பாகிஸ்தான் தன் மண்ணில் இருந்தும், தன் அடியாட்கள் மூலம் நம் மண்ணில் இருந்தும் காஷ்மீர் ஒற்றுமை தினம் என கடைப்பிடிக்கச் சொல்லி டிவிட்டர் பதிவுகளை மேற்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரன் கானும் தன் டிவிட்டர் பதிவில், இதனைக் குறிப்பிட்டு, வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அதே நேரம், காஷ்மீர் ஒற்றுமை தினத்திற்கும் பாகிஸ்தானிற்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பும் டிவிட்டர் வாசிகள், ஏன் பிப்ரவரி 5 ஆம் தேதியை, காஷ்மீர் ஒற்றுமை தினமாக அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்கின்றனர்.

“நமக்கு நினைவுக்கு வருவதெல்லாம் பாகிஸ்தானின் ஆதரவுடன் அந் நாட்டில் வசித்த காஷ்மீர் பயங்கரவாதிகள் 1984ஆம் ஆண்டு அதே நாளில் பிரிட்டனில் இந்திய தூதரக அதிகாரி ரவீந்திர மாத்தேயை கடத்திச் சென்று மூன்று நாட்களுக்குப் பின் கொலை செய்து தெருவில் உடலை வீசிய கொடூரம் தான்.

அழகான அமைதியான காஷ்மீரை சுடுகாடு என ஆக்கியிருக்கும் பாகிஸ்தான் ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ கடைப்பிடிப்பது விந்தையாக இல்லையா?

மதவெறியைத் தூண்டி இந்தியாவிற்கு சொந்தமான காஷ்மீர் பகுதியை ஆக்கிரமித்து அரை நூற்றாண்டாக அங்குள்ள மக்களை துயரத்திலும் அச்சத்திலும் வைத்திருக்கும் பயங்கரவாத நச்சு உற்பத்தி சாலை பாகிஸ்தான், காஷ்மீர் ஒற்றுமை தினம் கொண்டாடுவது கண்டிக்கப் பட வேண்டியது.

ஒசாமா பின்லேடனை தன் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு, வெளியே தேடுவதாக அமெரிக்காவிடம் பயங்கரவாத எதிர்ப்பு கபட நாடகம் போட்டதைப் போன்றதுதான், பாகிஸ்தானின் இந்த காஷ்மீர் ஒற்றுமை தினமும்!

ஆக, இன்று நாம் கடைப்பிடிப்போம் #AntiTerrorismDay #பயங்கரவாதஎதிர்ப்புதினம் ” என்ற கருத்துகளுடன் இன்று டிவிட்டரில் டிவிட்டர்கார்ட் எனப்படும் இமேஜ்கள் வைரலாகி வருகின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version