Home அடடே... அப்படியா? மதுரை; தனியார் மருத்துவ மனைகள் நிரம்பியதால்… உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்!

மதுரை; தனியார் மருத்துவ மனைகள் நிரம்பியதால்… உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்!

madurai hospital situation
madurai hospital situation

மதுரையில் அதிகரிக்கும் கொரோனா அரசு தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியதால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம்!

மதுரை அரசு மருத்துவமனைக்குள் நோயாளிகளை தரையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவுவதால் பரபரப்பு!

மதுரையில் நாளுக்குநாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுமையாக நிரம்பிவிட்டன. தொடர்ந்து நாளொன்றுக்கு ஆயிரம் பேர் நலம் பெற்று வீடுதிரும்பும் நிலையில் 1200பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தொடர்ச்சியாக போதிய ஆக்சிஜன் இல்லாத நிலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

இதனிடையே நேற்று மதுரை சின்ன உலகானியை சேர்ந்த சோலைமலை என்ற முதியவரை மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிசோதனை 25 ஆயிரம் பெற்று கொண்ட சில நிமிடங்களிலயே தனியார் மருத்துவமனை ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அவரை அனுமதிக்க முடியும் என்று மருத்துவமனை வாசலிலேயே உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

madurai hospital full

இதனையடுத்து, அரசு கொரோனா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சூழுலிலும் போராடிய முதியவரை படுக்கை இல்லாத நிலையி்ல் நீண்ட நேரம் காக்க வைத்திருந்தனர். போதிய படுக்கைகள் இல்லை என கூறியதால் முதியவர் அழைத்து வந்தவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் வீட்டிற்கே மீண்டும் அழைத்து சென்றனர்.

ஏராளமான பொதுமக்கள் முன்பாக நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே ,மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் போதிய படுக்கை இல்லாத நிலையில் நோயாளிகளையே தரையிலயே கிடப்பில் போட்டு சிகிச்சை அளிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது என சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து , உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version