Home சற்றுமுன் ஜூன் 14 வரை… தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!

ஜூன் 14 வரை… தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!

lockdown
lockdown

தமிழகத்தில் ஜூன் 14 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மளிகை, பலசரக்குகள் காய்கறி, இறைச்சி கடைகள் நேரக்கட்டுபாடுடன் செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளது.

ஜூன் 7 முதல் 14 வரையிலான ஊரடங்கு காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

மின் பணியாளர் (Electricians) பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப் படுவர்.

காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளது.

மீன் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப் படுவதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப் படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது என்றும், எஞ்சிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்றும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் சில தளர்வுகளையும் அவர் அறிவித்துள்ளார். அதன்படி,

  • மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்
  • காய்கறி, பழங்கள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
  • காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
  • மீன்சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதி
  • இறைச்சிக் கூடங்களுக்கு மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதி
  • அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
  • சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 டோக்கள் மட்டுமே வழங்கப்பட்டு பத்திரப்பதிவு
  • தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி

கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர எஞ்சிய மாவட்டங்களில் மேலும் தளர்வுகள்….

  • வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு(HouseKeeping) உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதி
  • சுய தொழில் புரிவோருக்கு இ-பதிவுடன் அனுமதி
  • எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், தச்சர், கணினி பழுதுநீக்குவோர் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை (இ பதிவுடன்) செயல்பட அனுமதி
  • எலக்ட்ரிகல் பொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
  • மிதிவண்டி, மோட்டார் சைக்கிள் பழுது நீக்கும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
  • ஹார்டுவேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
  • வாகனங்களில் உதிரிபாக விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
  • கல்வி புத்தகங்கள், எழுதுபொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
  • வாகன விநியோகிப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
  • வாடகை வாகனங்கள், டாக்சிகள், மற்றும் ஆட்டோக்கள் இ.பதிவுடன் செயல்பட அனுமதி
  • வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி
  • ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி

இ.பாஸ் எங்கே அவசியத் தேவை?

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்கு பயணிக்க இ.பாஸ் தேவை

கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை மாவட்ட ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள்

8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி

ஏற்றுமதி ஆணை வைத்திருப்பின், 10% பணியாளர்களுடன் செயல்பட குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி

நடமாடும் காய்கறி, பழ, மளிகை விற்பனை தொடரும்

நடமாடும் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை தொடர்ந்து செயல்படும்…

பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும்; பொருட்களை வாங்க, பைக், கார்களில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்; பொதுமக்கள் அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வருவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் முதலமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version