Home தொழில்நுட்பம் ஏடிஎம் கார்ட் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டுமா?

ஏடிஎம் கார்ட் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டுமா?

atm

SBI ATMகளில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் பெற வழிமுறை

SBI வங்கி வாடிக்கையாளர்கள், Yono appன் உதவியுடன் இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெற வேண்டும்.
லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு பெற்ற பின்னர், அதில் லாகின் பண்ண வேண்டும்.
இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெற 6 இலக்க MPIN நம்பரை உருவாக்கிக்கொள்ள வேண்டும். எல்லா பண பரிவர்த்தனைகளுக்கும் இது முக்கியம் என்பதால், நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
Yono app லாகின் செய்த பிறகு அதில் Yono cash பகுதிக்கு செல்லவும்.
Cardless transaction வசதி உள்ள ஏடிஎம்களுக்கு செல்லவும்.
ஏடிஎம்மில் தேவைப்படும் பணத்தின் மதிப்பை பதிவிடவும்.

வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு Yono cash transaction எண் வரும்.
இந்த எண், 4 மணிநேரமே செல்லுபடியாகும்.
ஏடிஎம்மில், Card-Less Transaction பிரிவை தேர்ந்தெடுத்து, கேட்கும் விபரங்களை பதிவு செய்தால், பணம் பெற்றுக்கொள்ளலாம்.

CICI ATMகளில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் பெற வழிமுறை

Cardless transaction முறையை ஊக்குவிக்கும் பொருட்டு, ICICI வங்கி தனது எல்லா ஏடிஎம்களிலும் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் பெறும் வழிமுறையை அமல்படுத்தியுள்ளது. இந்த சேவைக்காக, ICICI வங்கி, பிரத்யேகமாக ‘iMobile’ app உருவாக்கியுள்ளது.
‘iMobile’ appல் லாகின் செய்து அதில் உள்ள சர்வீசஸ் பிரிவில், ‘Cash Withdrawal at ICICI Bank ATM’ என்பதை தெரிவு செய்யவும்.
பணத்தின் மதிப்பு, அக்கவுண்ட் நம்பர் உள்ளிட்டவைகளை தேர்வு செய்தபின்பு, நான்கு இலக்க தற்காலிக பின் நம்பரை உருவாக்கி, பதிவிட்டு சப்மிட் பட்டனை அளிக்கவும்.
வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிக்கு ஒன்டைம் பாஸ்வேர்டு ( OTP) வரும்.
ICICI ATMக்கு சென்று, Cardless Cash Withdrawal தெரிவு செய்யவும். அதில் மொபைல் எண், குறிப்பிட்ட ஓடிபி எண் பதிவு செய்த பிறகு, தற்காலிக 4 இலக்க பின் நம்பரையும் பதிவிட்டு, பின் amount for withdrawal தெரிவு செய்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
ICICI ATMல் cardless transaction மூலமாக, நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரை பணம் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version