Home அடடே... அப்படியா? கிருமிநாசினியை தீபாவளிக்கு சற்று ஒதுக்கி வைத்துவிட்டு… இதைச் செய்வோம்!

கிருமிநாசினியை தீபாவளிக்கு சற்று ஒதுக்கி வைத்துவிட்டு… இதைச் செய்வோம்!

police-annct
police annct

தீபாவளித் திருநாள் நெருங்குகின்றது… இந்த சூழ்நிலையில் நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விசயம் ஒன்று இருக்கிறது

கடந்த பத்து மாதங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைவரின் வீட்டிலும் ஆல்கஹால் கலந்த கைசுத்தீகரிப்பான்கள் (SANITIZERS) புலக்கத்தில் இருக்கின்றது

நம் அனைவருக்கும் தெரியும் ஆல்கஹால் எளிதில் தீப்பற்றக்கூடிய திரவம் ஆகவே கைகளில் சேனிடைசர்களை உபயோகித்து விட்டு மத்தாப்புகள், வெடிகள் போன்றவற்றைத் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

மீறித்தொட்டால் கைகளில் தீக்காயம் உண்டாகும் நிலை வரும்.
சில இடங்களில் பெரிய தீ விபத்துகள் நேரும் அபாயமும் இருக்கின்றது. மேலும், வீட்டிலும் சேனிடைசரையும் வெடி மத்தாப்புகளையும் ஒன்றாக வைக்கக்கூடாது.

எங்கோ நிகழ இருக்கும் ஓர் அசம்பாவித சம்பவத்தை இந்த செய்தி தடுக்கலாம் எனவே, கட்டாயம் அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் இருக்கும் ஆல்கஹால் கலந்த சேனிடைசர் திரவங்களை குழந்தைகள், பிள்ளைகள் கைக்கு எட்டாத தூரத்தில் வைத்து விடுங்கள்.

கை கழுவ சோப் பயன்படுத்திக்கொள்ளலாம். வெடிகள் மத்தாப்புகளை உபயோகித்து முடிந்த சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சேனிடைசர்களுக்கு திரும்பலாம் அல்லது வெடிகள் வெடிக்கும் முன்பு கைகளை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டால் சருமத்தின் மேற்புறத்தில் இருக்கும் கண்ணுக்குப்புலப்படாத ஆல்கஹால் படிமம் நீக்கப்பட்டு விடும்.

வரும் தீபஒளித் திருநாளை தன்னலம் மற்றும் பிறர் நலம் பேணிக் கொண்டாடுவோம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version