Home உள்ளூர் செய்திகள் சென்னை சாவர்க்கர் நூலின் தமிழாக்கம்… ‘பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள்’ வெளியீடு!

சாவர்க்கர் நூலின் தமிழாக்கம்… ‘பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள்’ வெளியீடு!

விஜயபாரதம் பிரசுரம் புத்தக வெளியீடு – வீர சாவர்க்கர் எழுதிய Six Epoch of Indian History நூலின் புதிய தமிழாக்கமான
‘பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள்’ புத்தக வெளியீடு சென்னை புத்தகக் காட்சியில், விஜயபாரதம் புத்தக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

ஹெச். ராஜா (முன்னாள் தேசிய செயலாளர், பாஜக) நூலை வெளியிட, ஆர். தில்லை (நிர்வாக ஆசிரியர், ஜெயா டிவி) மற்றும் எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ் (நிறுவனர், இந்தியன் ஃபிரன்ட்லைனர்ஸ்) ஆகியோர் நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டனர்.

நூலை தமிழாக்கம் செய்த பத்மன் மற்றும் ஓவியங்கள் வரைந்தளித்த ஓவியர் சதாசிவம், நூல் அச்சிட்டாளர் பாலாஜி ஏஜன்சிஸ் சரவணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கௌரவிக்கப் பட்டனர்.

நூலின் புதிய மொழியாக்கம் குறித்த அறிமுக உரையை நூலாசிரியர் பத்மன் நிகழ்த்தினார். ஹெச். ராஜா சிறப்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள் என்ற இந்த நூலின் விலை ரூ.600 என்றும், சிறப்பு விலையாக புத்தகக் காட்சி நிறைவுபெறும் நாளான மார்ச் 9 ஆம் தேதி வரை 25% கழிவுடன் ₹450க்கு இந்த நூலினை சென்னை புத்தகக் காட்சியில் 358,359 விஜயபாரதம் அரங்கில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும், பதிப்பகத்தார் தெரிவித்தனர்.

மார்ச் 10 ஆம் தேதி முதல் 15% கழிவுடன் ₹500க்கு நூலினை முன் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், கூரியர் வாயிலாக அனுப்பி வைக்கப்படும் என்றும் பதிப்பகத்தார் கூறினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version