Home அடடே... அப்படியா? நவாமி கங்கை திட்டத்தைப் போன்று காவிரி கிளை நதிகளை புனரமைக்க முதல்வர் கோரிக்கை!

நவாமி கங்கை திட்டத்தைப் போன்று காவிரி கிளை நதிகளை புனரமைக்க முதல்வர் கோரிக்கை!

கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது

கோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட புதிய திட்டங்கள் தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது, நவாமி கங்கே திட்டத்தைப் போல், காவிரியை தூய்மையாக்க வேண்டும், கிளை நதிகளைப் புனரமைக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது…

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க கோவை மாநகருக்கு வருகை தந்துள்ள பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழக அரசு பல்வேறு கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மக்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது. கொரோனோ நோய் தொற்று காலத்திலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்தது. முதலீடுகளை ஈர்த்த மாநிலங்கள் பட்டியலில் முதல் மாநிலம் என்ற நிலையை தமிழகம் பெற்றுள்ளது.

குடிமராமத்து திட்டம், அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம், காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம் போன்ற பல்வேறு நீர்பாசன திட்டங்களை செயல்படுத்தி நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

934 கோடி மதிப்பீட்டில் கீழ்பவானி கால்வாய் நவீனபடுத்தும் திட்டத்தில், காலிங்கராயன் வாய்க்கால் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டமைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வால்காய்கள் மூலம் முழுமையான நீர் பாசன பகுதிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யவும், கடைமடை வரை நீர் சென்றடைவதை உறுதி செய்யவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டதை செயல்படுத்துவதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 401 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்கள் நவீனபடுத்தப்பட்டு 2,47,247 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்படும். இந்த திட்டத்திற்கான நிதிகளையும் தமிழகத்தின் இதர நீர்பாசன திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்திடுமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.

கோதாவரி – காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவித்துடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். நவாமி கங்கை திட்டத்தை போன்று காவிரி கிளை நதிகள் புனரமைக்கப்பட வேண்டும் என்றும் அந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

தொழில் வளர்ச்சியை மேம்படுத்த புதிய தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் மிகவும் நகரமையமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 48.45 % மக்கள் நகர பகுதியில் வசிக்கின்றனர்.

மத்திய மாநில அரசுகள் 50% – 50% அடிப்படையில் கூட்டு திட்டமாக செயல்படுத்திட கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திடுமாறும், சேலம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களிலிருந்து இரவு நேர விமானங்கள இயக்க ஒப்பதல் அளித்திடுமாறும், மதுரை மற்றும் கோவை விமான நிலையங்களின் விரிவாக்கம் நடைபெறும் என்று எதிர்பாக்கப்படுகிறது. கோவையிலிருந்து துபாய்க்கு நேரடி விமானங்களை இயக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version