images 41

கோத்தகிரியில் துவங்கிய பிக்சிஸ் பழ சீசன்

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பிக்சிஸ் மரங்களில் பழங்கள் அதிகளவில் காய்த்து இப்பழ சீசன் துவங்கியுள்ளது. இது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. 

பிக்சிஸ் பழம் தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களில் அதிகம் காணப்படுகிறது.வருடந்தோறும் மே மாதம் முதல் செப்டம்பர் வரை இந்த பழ சீசன் இருக்கும். தற்போது கோடைகாலம் தொடங்க உள்ளதையொட்டி நீலகிரி மாவட்டம்
எஸ்டேட் பகுதியில் உள்ள வீடுகளில் அதிகளவில் இந்த மரங்களை அதிகளவில் வளர்த்து வருகின்றனர். இந்த பழம் ரூ.300 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.

இப்பழத்தின் பிறப்பிடம் சீனா. இந்த பழம் சிறிய ஆப்பிள் போன்ற வடிவம் உடையது. தமிழில் இந்த பழத்தை குழிப்பேரி என்று அழைக்கின்றனர். இது   இனிப்பு புளிப்பு கலந்த சுவையாகும். பொட்டாசியம், இரும்பு பீட்டா கரோட்டின் தாது உப்புக்கள் மற்றும் விட்டமின் ஏ,சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். திசு வளர்ச்சி ரத்த சிவப்பணு அதிகரித்தல் இதயத்திற்கு மிகவும் நல்லது.

images 41

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.