IMG 20220501 WA0073 1

மணிமுத்தாறு அணையிலிருந்து கார் சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறப்பு..

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து கார் சாகுபடிக்காக இன்று தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.

மணிமுத்தாறு அணையில் இருந்து கார் சாகுபடித் தொடங்க வசதியாக தண்ணீர் மே 1இல் தண்ணீர் திறந்துவிடப்படும். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அணையிலிருந்து 40 அடி மதகு மூலம் பெருங்கால் பாசனத்திற்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்துவிட்டார். தண்ணீர் திறந்து வைத்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, மணிமுத்தாறு அணை பெருங்கால் பாசனப்பகுதிகளுக்கு கார் சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், தெற்குக் கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் உள்ள 2,756.62 ஏக்கர் பாசன பரப்பு விவசாய நிலம் பயன்பெறும். மே 1 முதல் ஆகஸ்ட் 28 வரை 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

IMG 20220501 WA0073 1

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.