கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

madurai communist campaign - 2026
#picture for representation

வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக., கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து, அரசு ஊழியர்கள், தொழிலாளர் உரிமை என எதையும் பேசவிடாமல், கடந்த 5 வருடமாக கம்யூனிஸ்ட்களை அடக்கி வைத்ததுடன்,  தற்போது 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,வின் திறமைக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாக சமூகத் தளங்களில் கருத்துகள் ட்ரெண்ட் ஆனது. 

திமுக., கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. வார்த்தைப் போர், கூட்டணியில் இருக்குமா இருக்காதா, உன்னால் தான் நான் கெட்டேன், என்னால் தான் நீ வெற்றி பெற்றாய் என்றெல்லாம் சகட்டுமேனிக்கு சண்டை சச்சரவுகள் வெளியில் இருந்த போதும், அனைவரும் எதிர்பார்த்தபடி, கடைசியில் சுமுகமாக  காங்கிரஸ் கட்சிக்கு, 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை சீட் என காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. 

அடுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, மதிமுக.,வுக்கு 4, கொமதேக.,வுக்கு 2 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இன்னும் கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு அறிவிக்க வேண்டிய நிலையில் இருந்தது. 

கூட்டணிக்குள் தேமுதிக., வந்ததால், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அளவிலேயே விசிக., கம்யூனிஸ்ட்கள் எதிர்பார்த்தார்கள். தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று இந்திய கம்யூனிஸ்ட்- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

அதன்படி,  திமுக., கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. தற்போது ஒன்று குறைத்துக் கொண்டு, 5 தொகுதிகளுக்கு சுருங்கி விட்டது.

தமிழக தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட்ட இடங்கள் எண்ணிக்கை

1989 – 13 – அதிமுக கூட்டணி
1991 – 10 – திமுக கூட்டணி
1996 – 13 – திமுக கூட்டணி
2001 – 8 – அதிமுக கூட்டணி
2006 – 10 – திமுக கூட்டணி
2011 – 10 – அதிமுக கூட்டணி
2016 – 25 – மக்கள் நலக்கூட்டணி
2021 – 6 – திமுக கூட்டணி
2026 – 5 – திமுக கூட்டணி

தற்போது திமுக., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ள தொகுதிகள் மற்றும் 2021 தேர்தலுடன் ஒப்பீடு: 

காங்கிரஸ் -28 தொகுதி (3 அதிகம்)|
முஸ்லிம் லீக் -2 தொகுதி (1 குறைப்பு)
ம.ம.க., -2 தொகுதி (அதே நிலை)
ம.தி.மு.க., -4 தொகுதி (2 குறைப்பு)
கொமதேக – 2 தொகுதி (1 குறைப்பு)
இந்திய கம்யூனிஸ்ட்- 5 தொகுதிகள் (1 குறைப்பு)

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

இந்நிலையில், தொகுதிப்பங்கீடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், “பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார். இதனால் தான் நாங்களும் 5 தொகுதிகளாக குறைத்துக் கொண்டோம். நாங்களும் இடங்களை குறைத்துதான் போட்டியிடப் போகிறோம் என முதல்வர் ஸ்டாலினும் கூறினார்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories