என்னுடைய இதயத்தின் ஒரு பகுதியை பிரிவது போல் இருக்கிறது.. கண்ணீர் விட்ட ஏர்ஹோஸ்டஸ்!

Published:

Aircostus - 2026

பல ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வேலை பணி ஓய்வு பெற்று செல்லும் போது, மிகப்பெரிய வருத்தம் ஏற்படும்.

ஒரு வேலையை எவ்வளவு நேசிக்கிறோம், அர்பணிப்புடன் செய்கிறோம் என்பது அந்தப் பணியில் இருந்து விலகும் போது தான் தெரியும்.

ஏர்ஹோஸ்டஸ் ஒருவர் தன்னுடைய பணியின் இறுதி நாளன்று வெளியிட்ட ஒரு வீடியோ பார்க்கும் அனைவரையும் நெகிழ்த்தியுள்ளது. கண்கலங்கிய நெட்டிசன்கள் அதை பாராட்டி வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு ஏர் ஹோஸ்டஸ் தன்னுடைய இறுதி வேலை நாளன்று, கண்கள் கலங்க, மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பயணிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றது.

வழக்கமாக விமானத்தில் அனைவரும் ஏறிய பின்பு விமானம் புறப்படுவதற்கு முன்னர் விமான பணிப்பெண்கள் அனைவருக்கும் அறிவிப்புகளை மேற்கொள்வார்கள். அதேபோல, வேலை இறுதி நாளன்று இந்த ஏர் ஹோஸ்டஸ் பயணிகளுக்கு முன் நின்று கொண்டு லேசாக சிரித்துக்கொண்டே மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

இந்த நாள் வரும் என்று என் கனவில் கூட நினைக்கவில்லை, எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. என்னுடைய இதயத்தின் ஒரு பகுதியை பிரிவது போல் இருக்கிறது” என்று கூறினார்.

அப்போது அவரின் கண்கள் கலங்கிவிட்டது. கண்களைத் துடைத்துக்கொண்டு “இந்த நிறுவனம் எனக்கு தேவையான அனைத்தையுமே வழங்கியுள்ளது. நிறுவனத்திற்கு வேலை செய்ய நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். இதேபோன்று சிறந்த நிறுவனம் எங்கேயும் கிடையாது.

நிறுவனத்தில் அனைவரையும் நன்றாக, குறிப்பாக பெண் ஊழியர்களை மிகவும் நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள். இங்கிருந்து செல்வதற்கு எனக்கு மனமில்லை, ஆனால் எனக்கு செல்ல வேண்டும் வேறு வழியில்லை” என்று நடுங்கும் குரலில் அவர் தொடர்ந்து பேசினார். அது மட்டுமின்றி பயணிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

“எங்கள் விமானத்தில் பயணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களால்தான் எங்களுக்கு நேரத்தில் ஊதியம் கிடைத்தது” அனைத்து பயணிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

அந்த விமானப் பணிப்பெண் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அது மட்டுமின்றி, இந்த வீடியோ கமெண்ட்டுகளின் மூலம், பணி ஓய்வு பெறும் ஏர் ஹோஸ்டஸ் பெயர் சுரபி என்றும் தெரியவந்துள்ளது. அவரை தனிப்பட்ட முறையில் அறிந்த யூசர்கள், அவரை பாராட்டித் தள்ளினர்.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்

Related articles

Recent articles

spot_img