Home சற்றுமுன் உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைந்த மதுரை மல்லிகை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைந்த மதுரை மல்லிகை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

madurai-flower-market
madurai flower market

உற்பத்தி அதிகரித்துள்ளதால் மதுரை மல்லிகை விலை வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மல்லிகை உற்பத்தி அதிகரிக்க தொடங்கி உள்ளதால் மதுரை மலர் சந்தையில் மல்லிகை வரத்து மிகக் கூடுதலாக உள்ளது. இதன் காரணமாக மதுரை மல்லிகையின் விலை பெருமளவு குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள மலர் சந்தையில் மல்லிகைப்பூவின் இன்றைய விலை ரூ.700ல் தொடங்கி ரூபாய் 500 வரை விற்றது. பிச்சிப்பூ ரூ.600, முல்லை ரூ.800, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.120, பட் ரோஸ் ரூ.100, தாமரை ஒன்று ரூ.10, மரிக்கொழுந்து ரூ.100 என பிற பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

பரவலாக தற்போது மல்லிகை பூவின் உற்பத்தி மிக சிறப்பாக இருப்பதால் வரும் வாரத்தில் மேலும் வரத்து கூடும் எனவும் நாளை தை அமாவாசை மற்றும் வரும் நாட்களில் முகூர்த்த தினங்களும் வருகின்ற காரணத்தால் பூக்கள் விலை கணிசமாக உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மல்லிகை பூவின் தற்போதைய விலை குறைவு பொது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version