Home சற்றுமுன் கரூரில் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

கரூரில் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

karur-transport-retired-men-protest
karur transport retired men protest

63 மாத மாத உயர்த்தப்படாத அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்காவிட்டால் சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணன் கரூரில் பேட்டியளித்தார்.

கரூரில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் சுமார் 2000 பேர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில்… 3 மாதமாக உயர்த்தப்படாமல் உள்ள அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வூதியர் களுக்கான காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், எனவும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்கப்பட வில்லை எனவும் ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

karur transport retired men protest1

ஆர்ப்பாட்டத்தின்போது ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் முதல் ஓய்வூதிய தாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை இதனால் ஒவ்வொரு ஓய்வூதியருக்கும் சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் எனவே உடனடியாக இந்த அரசு 63 மாதமாக உயர்த்தப்படாமல் உள்ள அகவிலைபடியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்துத் துறை அமைச்சரை பலமுறை சந்தித்த போதும் அவர் நிதி நிலைமை சரியில்லை என்று கூறுகிறார்.

இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் போக்குவரத்து கழகத்திற்கு கூடுதலாக மாதமொன்றுக்கு 27 கோடி ரூபாய் மட்டுமே செலவு ஏற்படும் எனவே உடனடியாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்

இது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் அடுத்த வாரம் ஓய்வூதியர்கள் சென்னையில் மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version