Home தமிழகம் ஆன்மீக அரசியலே திராவிட அரசியலுக்கு மாற்று: அர்ஜுன் சம்பத்!

ஆன்மீக அரசியலே திராவிட அரசியலுக்கு மாற்று: அர்ஜுன் சம்பத்!

arjun-sampath
arjun sampath

ஆன்மீக அரசியல் தான் திராவிட அரசியலுக்கும் லஞ்ச ஊழல் செய்யும் அரசுகளுக்கும் மாற்றாக அமையும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட அருண்குமார் விவகாரத்தை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை மாநகர் இந்து மக்கள் கட்சி சார்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அக் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது பேசிய அவர், ராமநாதபுரம் படுகொலைச் சம்பவங்கள் போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது இதனை மத்திய அரசு தலையிட்டு உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும். மேலும் உயிரிழந்த அருண்குமார் என் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் 25 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றார்.

சேலத்தில் சிவனடியார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குற்றச்சாட்டு வைக்கப்படும் காவல் ஆய்வாளர் மைக்கேல் மீது தமிழக அரசு கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவருக்கு அரசு விடுமுறை கொடுத்து வீட்டிற்கு அனுப்பி உள்ளது. சிவனடியார் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும்.

தாய்மொழிக் கல்வியை முன்மாதிரியாகக் கொண்டு செயல் படுத்தப்படுவதுதான் புதிய கல்விக் கொள்கை. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாமல் தாமதிப்பது சரியானது அல்ல. புதிய கல்விக்கொள்கை தமிழகத்திற்கு வேண்டும்.நவோதயா பள்ளிக்கூடங்கள் தமிழகத்திற்கு வேண்டும்.

எங்கேயும் இந்தித் திணிப்பு கிடையாது. மத்திய அரசு மாநில அரசுகளிலும் இந்தி திணிப்பு கிடையாது. இந்தி திணிப்பு என திமுக தனது சுயலாபத்திற்காக அரசியல் விளம்பரத்திற்காக செய்து வருகிறது.

விமான நிலையத்தில் அதிகாரி மீது வேண்டுமென்றே பொய் புகார் கொடுத்துள்ளார் கனிமொழி. மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறியும் விமான நிலைய அதிகாரி மீது கனிமொழி இன்னும் புகார் கொடுக்கவில்லை.

திமுக சார்பு அரசு அதிகாரிகளை கிளப்பிவிட்டு ஜிஎஸ்டி அலுவலகத்திலும் இந்தி திணிக்கிறார்கள் என்று தவறான முறையில் பொய் பரப்புரை செய்து வருகின்றனர். கோயபல்ஸ் பிரசாரத்தைக் திமுக திட்டமிட்டு தொடர்ந்து செய்து வருகிறது.

திமுக மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தி வரும் சன்சைன் பள்ளிகளில் இந்தியை திணிக்காதே என்ற போராட்டத்தை செப் 11ல் நடத்த உள்ளோம்.

திமுக மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் சன்சைன் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பும் உள்ளது. அரசுப்பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை இந்தியையும் கொண்டு வராமல் இருப்பது மாணவர்களுக்கு செய்யும் துரோகம்.

தமிழ் வழியில் மருத்துவம் பொறியியல் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதத்தில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ரஜினி ஏற்கனவே தான் கட்சி தொடங்கப் போவதாகவும் அரசியல் பிரவேசம் பற்றியும் தெளிவாக கூறிவிட்டார். ரஜினியிடம் இருந்து வரும் கருத்துகளை நாங்கள் ஆதரிக்கவே செய்கிறோம். ஆன்மீக அரசியல் தான் திராவிட அரசியலுக்கு மாற்று லஞ்ச ஊழல் செய்யும் அரசுகளுக்கு மாற்று.

ஆன்மிக அரசியல் என்பது கோவிலுக்கு செல்வது மட்டுமல்ல. ஆன்மீகத்தை கூறுவது மட்டுமல்ல. லஞ்ச ஒழிப்பு, சாராய ஒழிப்பு இதுதான் ஆன்மீக அரசியல். ஆன்மீக அரசியல் என்றால் வளர்ச்சி அரசியல். வளமான வலிமையான தமிழகத்தை உருவாக்குவதுதான் ஆன்மீக அரசியல்.

வருகின்ற டிசம்பர் ஜனரியில் தேர்தல் அறிவிப்பு வந்ததும் ரஜினி பிரச்சாரத்திற்கு வந்துவிடுவார். ரஜினி அரசியலுக்கு வந்தால் அனைத்துக்கட்சி கூட்டமும் காலியாகிவிடும். ஐபிஎஸ் ஐஏஎஸ் என எல்லோரும் ரஜினி பின்னால் தான் வர போகிறார்கள் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version