- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் உவமை கூற முடியாத குரு! ஆச்சார்யாள் அருளமுதம்!

உவமை கூற முடியாத குரு! ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar - 2026

குருவுக்கு உவமை ஏதும் இல்லை. ஏதாவது ஒரு பொருளை நாம் ஒருவருக்கு குறித்துக் காட்ட வேண்டுமானால் அதற்கொப்ப இருக்கும் வேறு ஒரு பொருளைக் காட்டி இப்படித்தான் அந்தப் பொருளும் இருக்கும் என்று சொல்லி புரிய வைப்பதே சிறந்த வழி.

இருந்த போதிலும் குரு எப்படியிருப்பார் என்பதை ஒரு உதாரணம் காட்டி எடுத்துக்கூற ஒருவன் முயன்றால் அது கடைசியில் தோல்வியில்தான் முடியும் உலகத்தில் உள்ள எந்த ஒரு பொருளையும், ஸ்பர்சமணியையும் கூட சேர்த்து குருவுக்கு உவமையாக கூற முடியாது.

இரும்புத் துண்டைப் ஸ்பர்சமணியோடு சேர்த்து தொடர்புபடுத்தினால் அது தங்கமாக மாறிவிடும். ஒப்பிடும்போது இவ்வளவு குறைச்சல் விலை குறைந்த இரும்பை தங்கமாக மாற்றும் சக்தி மணிக்கு உள்ளது. அப்படியேதான் குருவும் அஞ்ஞானத்தில் மூழ்கி தகுதியற்ற இருக்கும் ஒரு சிஷ்யனை அறிவு சொரூபமாக மாற்றிவிடுகிறார்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது ஸ்பரிசமணி குருவுக்கு தகுந்த உதாரணமாக சொல்லலாம் என்றே தோன்றும் இருந்தாலும் முழுமையாக கூறுவதற்கு பிரயோஜனம் தராது. ஒரு இரும்புத் துண்டை தங்கமாக மாற்றி விடலாம் அப்படி மாற்றப்பட்ட தங்கத்தைக் கொண்டு போய் மற்றொரு இரும்புத் துண்டும் வைத்தால் இரும்பு துண்டும் தங்கமும் அதன் நிலையில்தான் இருக்கும்.

அந்த இரும்புக் குண்டின் குணத்திலும் உருவத்திலும் எந்த மாற்றமும் ஏற்படாது மாறாக சிரத்தையும் பக்தியும் உடைய ஒரு சிஷ்யன் குரு ஞானியாக மாற்றி விடுகிறார் என்பது மட்டுமில்லாமல் அவனை நாடி வரும் சிஷ்யனின் தனக்கு சமமாக அவன் உயர்த்தி விடக் கூடிய சாமர்த்தியம் உடையவனாகவும் அவனை ஆக்கிவிடுகிறார்.

அதாவது குரு தன் சிஷ்யனை ஞானியாக மட்டும் மாற்றி காட்டாமல் மற்றொருவனை ஞானியாக மாற்ற கூடிய சக்தியையும் சிஷ்யனுக்கு அளித்து விடுகிறார். எனவே குருவுக்கு உவமையாக ஸ்பர்சமணியை சொல்ல முடியுமா? உதாரணமாகச் சொல்ல உலகத்தில் எந்தப் பொருளும் இல்லை

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version