- Ads -
Home ஆன்மிகம் “அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?”(பரமபிதாவே அறிவார்).

“அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?”(பரமபிதாவே அறிவார்).

“அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?”
 
பரமபிதாவே அறிவார்.
26056052 1817618858283271 3930286687593664750 n - 2026
(ஆனந்தமான பெயர் வைத்த பெரியவா)
 
 
ஒரு சிறு பதிவு.
 
 
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-140
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
 
கிராமத்தில் முகாம்.ஒரு குடியானவப் பெண்
தரிசனத்துக்கு வந்தாள்.
 
“என் மவனுக்குப் பேர் வைக்கணும்”
என்று பெரியவாளிடம் பணிவாக தெரிவித்தாள்.
 
அழகான தமிழில்,சுந்தரமான சிவனுடைய
பெயர்களில் ஒன்றைக் கூறுவார்கள்,பெரியவா
என்பது அருகிலிருந்த அடியார்களின் எதிர்பார்ப்பு.
 
“சதானந்தம்-னு பேர் வை”-பெரியவாள்.
 
இது பொதுப் பெயராக இருக்கிறதே?
எந்த ஒரு தெய்வத்தையும் சுட்டிக்காட்டுவதாக
இல்லையே? என்று அடியார்களுக்கு மன நெருடல்.
 
பின்னர் தெரியவந்தது.- அந்தப் பெண்மணி
கிறிஸ்துவ மதத்தை தழுவியர் என்று.
 
அதனால்தான்,அந்தத் தாயாரின் மனத்தில் நெருடல்
ஏற்படாத வகையில்,ஒரு பொதுப் பெயரைக்
கூறினார்கள் போலும்!
 
அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு
மட்டும் எப்படித் தெரிந்தது.?
 
பரமபிதாவே அறிவார்.

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version