Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் திருக்கோடிக்காவல் கல் நடராஜர் தரிசனம்!

திருக்கோடிக்காவல் கல் நடராஜர் தரிசனம்!

thirukkodikaval kal natarajan
thirukkodikaval kal natarajan

கல் நடராஜர், சிவகாமி, காரைக்கால் அம்மை தரிசனம்..!! திருக்கோடிக்காவல்…!!

ஜென்மம் ஜென்மாய் செய்த பாவங்கள் அனைத்தையும் தீர்க்கும் ஒரே தலம் கோடீஸ்வரர் திருக்கோயில்…! 1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனி பகவானும் எமனும் எதிரெதிர் சந்நிதியில் அருள்கின்றனர்…! சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சந்நிதியில் உள்ளனர்…!

இங்குள்ள சனிபகவான் “பாலசனி’ என அழைக்கப்படுகிறார்..! இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது…! மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர்…!

இவ்வூரை ஒட்டி .. காவேரி நதி,“உத்தரவாஹினி’ யாக அதாவது தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது…!

இங்குள்ள உத்திரவாஹினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால்… எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது பூர்வ நம்பிக்கை…! இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது….!

இத்தலத்தில் நவக்கிரகம் கிடையாது… விதியின் பயனை யாராலும் மாற்ற முடியாது… ஆனால் மதியால் குறைக்க முடியும்…! விதியினால் கஷ்டப்படுபவர்கள் இத்தலம் வந்து தரிசித்தால் அதன் பாதிப்பு வெகுவாக குறையும்…!

ஒரு சமயம் கைலாசத்தையும், திரிக்கோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய் விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட பூமி இது..!

இங்கே கணபதியின் மகிமையும் கூடியுள்ளது..! இந்த இடத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கிறது..! இங்கே காவிரி உத்திரவாஹினியாக இருக்கிறாள்…!

என்னுடைய சன்னதியில் இருக்கும் இந்த உத்திரவாஹினியில், கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால், எல்லா பாவங்களும் தொலைந்து விடும். இவ்வாறு பகவான் கூறி அருளிய தலம் இது…!

அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்,
திருக்கோடிக்காவல்,(வழி)
நரசிங்கன் பேட்டை–609 802.
திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்…!!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version