Tag: ஆதரவு

  • வண்ண ஓவியங்கள் மூலம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த ஓவியர்

    வண்ண ஓவியங்கள் மூலம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த ஓவியர்

    சென்னை: வண்ணமயமான ஓவியங்கள் மூலம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வரும் போராட்டம் இன்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் கடந்த நான்கு நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சினிமா பிரபலங்களும் மக்களுடன் இணைந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் அவர்கள், தன்னுடைய ஓவியங்கள் மூலம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழர்களின் அடையாளம், பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு புகழ் பாடும் வகையிலும்,…

  • பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகத் திரளும் எம்.எல்.ஏ.க்கள்!

    ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி பிரம்மாண்டமாக எழுந்தது. முதல்வராக ஓ.பி.எஸ். பொறுப்பேற்ற நிலையில், பொதுச்செயலாளராக சசிகலா காய் நகர்த்தி வருகிறார். அ.தி.மு.கவின் இரண்டாம் கட்டதலைவர்கள், சசிகலாவை பொதுச்செயலாளராக பொறுப்பேற்கும்படி கோரிக்கை வைத்தார்கள். இன்னும் ஒருபடி மேலே போய், சசிகலாவே முதல்வராக வேர வேண்டும் என்றும் சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு செயற்குழு கூட இருக்கிறது. இதில் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதற்கிடையே, முதல்வர் ஓ.பி.எஸ்., சசிகலாவுக்கு எதிராக அணி…

  • காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவா?: சுகாசினி விளக்கம்

    சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவான நிலையெடுத்ததாக, நடிகை சுகாசினி குறித்த செய்திகள் பரவின. இதற்கு சுகாசினி மறுப்பு தெரிவித்துள்ளார். யாரோ சிலர் வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் வாயிலாக தன் பெயரைப் பயன்படுத்தி தவறான தகவலைப் பரப்பி வருவதாகவும், அதற்காக தான் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். அவர் ஊடக நண்பர்களுக்கு அளித்த தகவல்: Dear Media Friends, Some one is using my photograph on whatsapp and twitter to make his…