Home உலகம் வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் உடல்நிலை குறித்து அரசு ஊடகம் ‘மூச்’!

வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் உடல்நிலை குறித்து அரசு ஊடகம் ‘மூச்’!

kim jung unn

கவலைக்கிடத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் உடல் நிலை.. பதவியில் அமர தயாராகிறார் தங்கை கிம் யோ ஜங்?

உலக ஊடகங்களும் தலைவர்களும் வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் உடல் நிலை குறித்து விவாதித்துக் கொண்டிருக்கும் போது, புதன் கிழமை இன்று அந்நாட்டின் அரசு ஊடகம் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. கிம் ஜங் உடல் நிலை குறித்து ஒருவார்த்தையும் அது மூச் விடவில்லை…

வடகொரியாவின் அதிபர் கிம் ஜங் உன்னிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவலை அடுத்து அவரது இடத்தில் அவரின் சகோதரி கிம் யோ ஜங் அமர்வார் என்று கூறப்படுகிறது.

வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அமெரிக்க உளவுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. அவர் வழக்கமாக அவரது தாத்தாவின் பிறந்தநாள் விழாவிற்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை அவர் அந்த விழாவில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில்தான், அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அமெரிக்கத் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த தகவல்களை வடகொரிய அரசு உறுதிப்படுத்தவில்லை.

அதிபரின் உடல்நிலை குறித்த தகவல்கள் காட்டுத் தீ போல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அவரது இளைய சகோதரி கிம் யோ ஜங் (31) அந்த நாட்டில் மாபெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறார். இவருக்கு அண்ணனிடம் இருக்கும் பண்புகள் அப்படியே இருப்பதாக அந்நாட்டு அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சகோதரர் கிம் ஜங் உன் எடுத்த கடுமையாக முடிவுகளில் கிம் யோவின் பங்களிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கிம் யோ வடகொரியாவின் முக்கியமான தலைவராக கருதப்படுகிறார். கிம் யோ ஜங் முக்கியமான நபராக உருவெடுத்து வருவது அந்நாட்டினரை ஒன்றும் ஆச்சரியப் படுத்தவில்லை. ஏனெனில் கடந்த மாதம் ராணுவ பயிற்சியின் போது பயம் கொண்ட நாய் குரைக்கத்தான் செய்யும் என தென்கொரியா கிம் யோ ஜங் கடுமையாக விமர்சனம் செய்ததை அனைவரும் அறிந்ததே. இதுகுறித்து ஆய்வாளர் யங்ஷிக் பாங் கூறுகையில் தென் கொரியாவுக்கு எதிராக அத்தகைய கடுமையான கருத்தை முன்வைக்க தங்கைக்கு அனுமதி கொடுத்ததே அண்ணன் கிம் ஜங் உன்தான்.

அவருக்கு மாற்றாக தங்கை கிம் யோ ஜங் வளர்ச்சியை அவர் அனுமதித்துள்ளார். 31 வயதாகும் கிம் யோ மிகவும் புத்திசாலி. அனைத்தையும் வேகமாக கற்றுக் கொள்வார். அனேகமாக அவரது அண்ணனின் உடல்நிலை குறித்த கேள்விகள் தொடர்பாக அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் எதிர்பார்க்கிறார்கள் என்றார்.

கிம் ஜங் உன்னைவிட 4 ஆண்டுகள் இளையவரான இவர் தனது சகோதரருடன் சேர்ந்து சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்றனர். உன்னுக்கு மிகவும் நெருங்கியவர். இவர் வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சியின் பிரசாரத் துறையின் இணை இயக்குநராக உள்ளார். இவர் பிரசாரத் துறையில் மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் கவனத்தை பெற்றுள்ளார். எனவே வடகொரியாவில் பதவியில் இவர் அமருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் அரசு ஊடகம் நாட்டின் மக்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version