theni1

முல்லைப் பெரியாறு அணை உபரிநீர் கேரளத்திற்கு திறப்பு..அணை தண்ணீரை படிப்படியாக திறந்து விடவேண்டும்-பினராயி விஜயன்

theni1

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளத்திற்கு  உபரி நீர் இன்று விநாடிக்கு 534 கன அடியாக, தமிழக அதிகாரிகளால் திறக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் வெள்ளிக்கிழமை நீர்மட்டம் 137.50 அடி உயரமாக இருந்தது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 7,616 கனஅடியாகவும், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு, 2,166 கனஅடி திறந்துவிடப்பட்டது.

ரூல் கர்வ் அட்டவணைப்படி கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு செல்லும் விதமாக விநாடிக்கு 534 கனஅடி தண்ணீர் மதியம் 1 மணிக்கு, தமிழக பொதுப்பணித்துறையின் பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம்இர்வின்,  அணையின் மூன்று மதகுகளை ( வி-2, வி-3, வி-4 ) 30 செ.மீ., உயரம் வரை அதிகரித்து திறந்து வைத்தார். அதில் விநாடிக்கு, 534 கன அடி தண்ணீர் இடுக்கி அணையை நோக்கி சென்றது.

ரூல் கர்வ் விதியை பயன்படுத்தி கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வதை தடுக்கும் செயலை கண்டிப்பதாகவும், ரூல் கர்வ் அட்டவணை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணை தண்ணீரை படிப்படியாக திறந்து விடவேண்டும்-எனமு.க.ஸ்டாலினுக்கு, பினராயி விஜயன் கடிதம் அனுப்பி வைத்தார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நிலவும் அபாயகரமான சூழ்நிலையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்திய வானிலை மையம் கணிப்புகளின்படி மழை பெய்வதால் அணைக்கு தண்ணீர் அதிகம் வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டத்தை சீராக குறைக்க வேண்டும் என விரும்புகிறேன். சென்னை: கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருங்கி உள்ள நிலையில் இடுக்கி உள்ளிட்ட கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே ‘ரெட்’ அலர்ட் விடுத்துள்ளது. அதற்கேற்ப மழை பெய்கிறது. இதே நிலை நீடித்தால் அணையின் நீர் மட்டம் கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. இப்போது அணைக்கு அதிகளவு நீர் வரத்து உள்ளது.

எனவே முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நிலவும் அபாயகரமான சூழ்நிலையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்திய வானிலை மையம் கணிப்புகளின்படி மழை பெய்வதால் அணைக்கு தண்ணீர் அதிகம் வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டத்தை சீராக குறைக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த விசயத்தில் நீங்கள் உடனடியாக தலையிட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையை கருத்தில் கொண்டு அணையில் இருந்து வெளியேறும் நீர் வெளியேற்றம், உபரி நீரை விட அதிகமாக இருப்பதை உறுதி செய்ய படிப்படியாக திறந்து விட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். முல்லைப் பெரியாறு அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அணையின் ஷட்டர்களை திறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே கேரள அரசுக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

theni

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.