December 6, 2025, 7:26 AM
23.8 C
Chennai

கச்சநத்தம் 3 பேர் கொலை வழக்கு: 27 பேருக்கு ஆயுள் தண்டனை – சிவகங்கை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..

kamadenu 2022 08 60eb5d96 8e26 4d98 8a55 8242035b944e 7 - 2025

2018-ம் ஆண்டு கச்சநத்தம் கோவில் திருவிழா முன்விரோதத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம்-ஆவாரங்காடு கிராம பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் கோவில் திருவிழா நடந்தது. அப்போது முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக இரு சமுதாயத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக அப்போது பழையனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரவு 10 மணி அளவில் கச்சநத்தம் கிராமத்திற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளை சூறையாடினார்கள். இதை தடுக்க வந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (65), சண்முகநாதன் (31), சந்திரசேகர் (34) ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலை தொடர்பாக ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த சுமன், அருண்குமார், சந்திரகுமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 3 பேர் சிறுவர்கள் ஆவார்கள்.

வழக்கு விசாரணையின்போது 2 பேர் இறந்து விட்டனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார். இதனால் மற்ற 27 பேர் மீது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்தது. இருதரப்பினரிடமும் விசாரணை முடிந்த நிலையில் கடந்த 1-ந்தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். அப்போது 3 கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 27 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். தண்டனை விவரம் நேற்று முன்தினம் (3-ந்தேதி) அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

அன்றைய நாள் குற்றவாளிகள் 27 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட 3 பேரின் உறவினர்களும் நீதிபதி தீர்ப்பு குறித்து கருத்துக்களை கேட்டார். அதனை தொடர்ந்து இன்று (5-ந்தேதி) தீர்ப்பின் முழு விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார். இதையொட்டி இன்று சிவகங்கை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வழக்கின் தீர்ப்பின் விவரம் அறிய கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து 11.45 மணி அளவில் நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பின் விவரங்களை வாசித்தார். அதில், 2018-ம் ஆண்டு கச்சநத்தம் கோவில் திருவிழா முன்விரோதத்தில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

6 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories