Tamil News large 3092642 - 2026

கோயில் விழாவில் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு..

சற்றுமுன்
Tamil News large 3092642 - 2026

தின்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே ஆண்டியபட்டி மகாலட்சுமி அம்மன், கருப்பசாமி கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் உடலில் அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாடு பக்தி பரவசத்தில் நிகழ்ந்தது.


இவ்விழாவையொட்டி விநாயகர், நவ மூர்த்திகள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து, சிறப்பு அபிஷேகம் நடந்தது. சேர்வை ஆட்டத்துடன் அதிர்வேட்டுகள் முழங்க அதிகாலை தேர் பவனி நடந்தது.


முக்கிய நிகழ்வாக தண்ணீர்துறையில் பக்தர்கள் நீராடி தலையில் தேங்காய் உடைக்கும் வழிபாடு நடந்தது. பக்தர்கள் வரிசையாக அமர்ந்திருக்க கோயில் பூஜாரி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார். தொடர்ந்து கோயில் முன் உள்ள கம்பத்தில் நெய் தீபம் ஏற்றி பெண்கள் வழிபட்டனர். பக்தர்கள் சாட்டையால் உடலில் அடித்து நேர்த்திகடன் செலுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.