‘தமிழர் பாசாங்கு’; திமுக.,வின் இரட்டை வேடம்: தோலுரித்த அமித் ஷா!

1723147 amith sha - 2026

காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய அமைச்சர்களாகப் பதவி வகித்தபோது, தமிழகத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் மக்கள் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பல முறை தன்னைச் சந்தித்தபோதும் அது குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல், திமுக எம்பிக்கள் இரட்டை வேடம் போடுவதை நாடாளுமன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டினார் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் Amit Shah அவர்கள்.– என்று கு. அண்ணாமலை கூறியுள்ளார். 

நாடாளுமன்றத்தின் மக்களவையில் குடிப்பெயர்வு மற்றும் வெளிநாட்டினர் மசோதா தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது திமுக., எம்பி., கனிமொழி பேசுகையில், குடிப்பெயர்வு மற்றும் வெளிநாட்டினர் மசோதாவில் சிறப்பு பரிந்துரைகளை இணைக்க வேண்டும். அந்த வகையில், இலங்கை தமிழ் அகதிகளை நீண்ட கால அகதிகளாக சட்டத்தில் தனித்துவமான வகையாக அங்கீகரிக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் வாழ்ந்தவர்கள் அல்லது இங்கே பிறந்தவர்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு விரைவான குடியுரிமைக்கு சட்டப்பூர்வ பாதையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்” என்றார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

கனிமொழியின் இந்தப் பேச்சுக்கு உடனடியாக பதில் அளித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவர் பேசுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இத்தனை தமிழ் அகதிகள் வந்துள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் அவர்களுக்கான இந்திய அரசாங்கத்தின் கொள்கை என்ன? என்றும் கேட்டார். அவர் மிகவும் நன்றாகத்தான் பேசினார். இலங்கை அகதிகள் விஷயத்தில் கனிமொழிக்கு இதயம் எப்படி வலிக்கிறதோ, அதே மாதிரிதான் எனது இதயமும் வலிக்கிறது. அகதிகளுக்கான எங்கள் கொள்கை என்ன? என்று கனிமொழி கேட்டார். நான் அதை பற்றி விளக்கம் அளிக்கிறேன்..

இலங்கை அகதிகளுக்கான 1986-ம் ஆண்டின் இந்திய அரசாங்கத்தின் கொள்கை அப்படியேதான் இப்போதும் உள்ளது. நீங்கள் (திமுக) 10 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் இருந்த போதும் கொள்கை அப்படியே இருந்திருக்கிறது.. 10 ஆண்டுகளாக தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தார், டி.ஆர்.பாலுவும் ஒரு அமைச்சராக இருந்தார். ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை. இப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று எங்களிடம் கேள்வி கேட்கிறீர்களா? அப்போது நீங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், எங்களிடம் கேட்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. எங்களுக்கும் வசதியாக இருந்திருக்கும்.

தமிழ் அகதிகளுக்கான நீங்கள் வகுத்த கொள்கையில் நாங்கள் ஒரு ‘கமா’வைக் கூட மாற்றவில்லை. திமுக., அங்கம் வகித்த அரசாங்கத்தில் இருந்தபோது பின்பற்றப்பட்ட அதே கொள்கையை நாங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஏதேனும் மாற்றங்களை விரும்பினால், அவற்றை என்னிடம் கொடுங்கள். அதை நாங்கள் பரிசீலிப்போம்..” என்றார். 

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

அப்போது வடசென்னை தொகுதி எம்பி., கலாநிதி வீராசாமி குறுக்கிட்டு, “நீங்கள் ஏதாவது செய்யுங்கள்!” என்று அமித் ஷாவைp பார்த்து கோரிக்கை வைத்தார். 

அதற்கு பதில் அளித்த அமித்ஷா,  “இதுவரை, திமுக., எம்பி.,க்கள் அனைவரும் வெவ்வேறு பிரச்னைகள் தொடர்பாக நான்கு முறை என்னை சந்தித்துள்ளனர். ஆனால் ஒரு முறைகூட அவர்கள் தமிழ் அகதிகளைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால் இப்போது ”ஏதாவது செய்யுங்கள், ஏதாவது செய்யுங்கள்” என்று கூறுகிறார்கள். நீங்கள் தமிழ் அகதிகள் தொடர்பான பிரச்சினையை ஒருபோதும் எழுப்பவில்லை. உங்கள் கொள்கை நல்லதாகத்தான் இருக்கும் என்று கருதி, நாங்கள் அதை பின்பற்றி வருகிறோம். இப்போதும் கூட, நீங்கள் ஏதாவது பரிந்துரைத்தால், நாங்கள் அதைப் பரிசீலிப்போம்”  என்று பதில் அளித்தார் அமித் ஷா..

ஆக திமுகவின் இரட்டை வேஷம் அம்பலமாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories