தன்னந்தனியே சாலைமறியல்! திமுக கொடியேந்தி தில்லு காட்டிய பெண்!

dmk women stops bus

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பில் இன்று சாலைமறியல் போராட்ட்டம் நடத்தப் பட்டது. முக்கிய எதிர்க்கட்சியான திமுக., தலைமையில் பல்வேறு கட்சியினரும் இணைந்து, இன்று போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பல இடங்களில் கல்வீச்சு, பஸ் மறியல் என வன்முறைகளும் அரங்கேறின. சில இடங்களில் கைது செய்யப் பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். சில இடங்களில் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, சாலை யோரம் நிற்க வைத்தனர்.

இந்நிலையில், சாலையோரம் தடுத்து வைக்கப்பட்ட திமுக பெண் தொண்டர் ஒருவர் தன்னந்தனியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டார். திமுக கொடியை கையில் ஏந்திச் செல்லும் அந்தப் பெண், சாலையில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது சாலை ஓரமாக தடுத்து வைக்கப் பட்டிருந்த திமுக.,வினர் உற்சாக கோஷம் எழுப்பினர்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.