உரிமைப் போராட்டம் வன்முறையாக மாற வாய்ப்பு உண்டு: கமல்!

Published:

kamal 5 - 2026

சென்னை: காவிரி உரிமைப் போராட்டத்தை அடக்க முயன்றால் அது வன்முறையாக மாற வாய்ப்புண்டு என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரி உரிமைப் போராட்டம் வன்முறையாக மாறிவிடக் கூடாது. ஆனால், போராட்டத்தை அடக்க முயன்றால், அது வன்முறையாக மாற வாய்ப்புண்டு” என்று குறிப்பிட்டார்.

ஆனால், இன்று சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் காவிரிக்காக போராட்டம் நடத்தியவர்கள், பஸ்களின் மீது கல்வீசித் தாக்கியுள்ளனர். பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களின் போது வன்முறை வெடித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் கல்வீசித் தாக்கியதுல், சென்னையில் போலீஸ் உயரதிகாரி உள்ளிட்ட இருவர் படுகாயம் அடைந்தனர்.

Related articles

Recent articles

spot_img