― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைமன்னார்குடி ஜீயர் அயோத்தி விழாவில்..! கேள்விகளுக்கு இதோ ‘நச்’ பதில்கள்!

மன்னார்குடி ஜீயர் அயோத்தி விழாவில்..! கேள்விகளுக்கு இதோ ‘நச்’ பதில்கள்!

- Advertisement -
sendalankara jeeyar swami in ayodhya

செண்டலங்கார ராமானுஜ மன்னார் ஜீயர் ராமர் கோவிலுக்கு போகலாமா..

பைக்குமேல உக்காந்து போஸ் கொடுக்கலாமா..?

ஒரு மடாதிபதியின் நியமங்கள் என்ன என்று விதியத்து போன சில கீழ்நிலை ஜென்மங்கள் சமூகவலை தளத்தில் பின்னூட்டங்கள் போட்டு கொண்டு இருப்பது கவனத்துக்கு வந்தது.

sentalankara jeeyar1

மன்னார்குடி செண்டலங்கார ராமானுஜ ஜீயர் நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி மடத்தை அலங்கரிக்க மட்டும் வந்த ஜீயர் அல்ல. இதை முதலில் கருத்தில் கொண்டு, அவரைப் பற்றி ஏதேனும் சொல்வதென்றால் சொல்லுங்க.

ஒரு யதியைப்பற்றி, அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பொது வெளியிலோ, அல்லது தனிப்பட்ட விதத்திலோ கருத்து சொல்லும் அளவுக்கு சந்நியாசம் மேற்கொள்ளாத, அவரைப்போல தொண்டில் ஈடுபடாத எவருக்கும் தகுதி இல்லை.

sendalankara jeeyar4

பசுவதையை தடுப்பதற்காக, பசுக்களை கடத்தியவர்களை, வண்டியுடன் மறித்து, நேரடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போய், புகார் கொடுத்து, அதனை எதிர்த்து நூற்றுக்கணக்கான வந்த எதிராளிகளை தனி ஒருவராக ஸ்ரீரங்கனே துணை என்று எதிர்கொண்டவர் அவர். வாழ்க்கையில இப்படியாக நாம செய்யவேண்டிய காரியத்தை, செய்ய துப்பில்லாம ஒரு யதியை செய்ய வெச்சிருக்கோமே என்று முதலில் தலை குனிந்து நிற்க வேண்டியது நாம் எல்லோரும். நிலைமை இப்படியிருக்க, அவரை கேள்விகேட்க மட்டுமல்ல, அப்படி நினைக்கக்கூட தகுதி இல்லாதவர்கள் நாம் எல்லோரும்.

sendalankara jeeyar5

எங்கயோ ஓரிடத்தில் மதமாற்றம் நிகழ்கிறது என்று கேள்விப் பட்டால், நமக்கெல்லாம் அது ஒரு சாதாரணமாக கடந்து போகும் செய்தி. ஆனால் அவர் நேரடியாக களத்துக்கு போவார், மக்களிடம் பேசுவார், திருகுலத்தார் என்றால், மிகப்பிரியமாக வீட்டுக்குள் போவார், விளக்குபூஜை செய்ய சொல்வார், பாதபூஜையை ஏற்றுக்கொள்வார். இதில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத நமக்கெல்லாம், அவர் பாததூளியை கூட சுவீகரிக்க தகுதி இருக்குதா என்றே சந்தேகம். இதில் எங்கிருந்து அவரைப்பற்றி விமர்சனம் வைக்கிறது?

sendalankara jeeyar3

சென்னை வெள்ளம், கஜா புயல், ஊக்கி புயல், கொரோனா ஊரடங்கு, என்று எந்த இயற்கை பேரிடராகட்டும், முதலில் களத்தில் நேரடியாக இறங்குவது இவர்தான். பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணப்பொருள் திரட்டுவதாகட்டும், தேவையானவர்களுக்கு, தேவையான உதவி, மருந்து, உணவு கொடுப்பதாகட்டும், தன்னுயிரையும் பொருட்படுத்தாது காலை, மாலை, இரவு என்று நேரம் கருதாது உழைப்பதாகட்டும், இவரைப்போல ஒரே ஒரு யதியை எங்கு தேடினாலும் காண இயலாது.

sendalankara jeeyar2

போலி சாமியார்களின் மீது நடவடிக்கை எடுக்க முன்மொழிவதும், இந்துத் தெய்வங்களின் மீது அவதூறு செய்வோரை கண்டிப்பதும் என்று சமயக் கடமைகளையும் செவ்வனே செய்து வருகிறார்.

அதனால, இவரைப் போல செயல்பட முடிந்தால் செய்யவும், இல்லேன்னா, வாயை மூடிக்கிட்டு போகவும்.அவரின் தைரியத்தில் 100 ஒரு பங்கு கொண்ட மனிதரை நான் கண்டதில்லை ..

150 நபர்களில் ஒருவராக அயோத்தி ராமர் கோவிலில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டவர்களில் சுவாமிகளும் ஒருவர்..

கடலூர் கஜா புயலின் பொது .. ஒரு கிறித்துவ கிராமத்தில் .. இருந்த ஒரு சர்ச்சில் உள்ளே அமர்ந்து பொருள் உதவிகளை செய்தார் .. சுவாமி என்ன இப்படி என்று கேட்டேன் .. அந்த சர்ச் காரன் மதம் மாற்றி விட்டு அதற்க்கு பிறகு வந்து கூட இந்த ஏழை மக்களை கண்டுகொள்ளவில்லை .. நாம் செய்வோம் என களத்தில் இறங்கியவர்..

மறுபடி மறுபடி சொல்கின்றோம்…உங்க வட்டத்துக்குள் சிக்காத, நீங்க கற்பனையில் வாழும் உலகத்தில் இல்லாதவர்….

இவரின் மீது எப்போதும் குற்றம் காண்பதை விட, இவரின் பணியில் ஒரு சதவீதம் நாமோ, அல்லது வேறு ஒருவரோ செய்ய இயலுமா என்று பார்த்துவிட்டு, அப்புறம் வாயை திறவுங்கள் கருத்து கனவான்களே…

  • மு.ராம்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version