To Read it in other Indian languages…

Home ஜோதிடம் பஞ்சாங்கம் பஞ்சாங்கம் பிப்.03- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம் பிப்.03- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - Dhinasari Tamil
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் பிப்.03 – வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||

!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!

!!ஸ்ரீராமஜயம்!!

தை ~ 20 (3.2.20223) வெள்ளி கிழமை.
வருடம் ~ சுபக்ருத்
{சுபக்ருத் நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ உத்தராயணம்
ருது ~ ஹேமந்த ருது.
மாதம்~ தை மாஸம் {மகர மாதம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 8.36 pm வரை த்ரயோதசி பின் பின் சதுர்த்தசி
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம் ~ 8.12 am வரை திருவாதிரை பின் புனர்பூசம்
யோகம் ~ விஷ்கம்பம்
கரணம் ~ கௌளவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 6.40
சந்திராஷ்டமம் ~ விருச்சிகம்
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்த திதி ~ த்ரயோதசி
இன்று ~ ப்ரதோஷம்

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - Dhinasari Tamil

இன்றைய ராசிபலன்கள் – 03.2.2023

மேஷம்

சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் தடைகளை வெற்றி கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : வெற்றி கிடைக்கும்.
பரணி : பயணங்கள் கைகூடும்.
கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.


ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களிடத்தில் கனிவு வேண்டும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் வழியில் எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். சேமிப்புகளை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். தாமதம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : கனிவு வேண்டும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


மிதுனம்

உழைப்புக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முடிவுகளில் கவனம் வேண்டும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மிருகசீரிஷம் : உயர்வு உண்டாகும்.
திருவாதிரை : தெளிவு பிறக்கும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.


கடகம்

எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். பெரியவர்களிடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வேலை செய்யும் இடத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுபகாரிய செலவுகள் ஏற்படும். வரவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
புனர்பூசம் : மதிப்பு மேம்படும்.
பூசம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.


சிம்மம்

வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். பூர்வீக சொத்துக்களின் வழியில் லாபம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் சில மாற்றமான வாய்ப்புகள் அமையும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : லாபம் உண்டாகும்.
உத்திரம் : வரவுகள் கிடைக்கும்.


கன்னி

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனை சார்ந்த காரியங்களில் ஆதாயம் உண்டாகும். வியாபார ரீதியான சந்திப்புகள் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பயணங்களின் வழியில் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.


துலாம்

ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் வேலை ஆட்கள் ஆதரவாக இருப்பார்கள். சில நாட்களாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். வேலை நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : இன்னல்கள் நீங்கும்.
சுவாதி : சிக்கல்கள் குறையும்.
விசாகம் : நம்பிக்கை பிறக்கும்.


விருச்சிகம்

விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொறுமையான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வெளி உணவுகளை தவிர்க்கவும். வாக்குறுதி அளிப்பதில் சிந்தித்து செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : நம்பிக்கை மேம்படும்.
கேட்டை : சிந்தித்து செயல்படவும்.


தனுசு

கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புத்துணர்ச்சியான சிந்தனைகள் பிறக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். புதிய வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். கால்நடை பணிகளில் லாபம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மூலம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூராடம் : ஆர்வமின்மை குறையும்.
உத்திராடம் : எண்ணங்கள் கைகூடும்.


மகரம்

எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
உத்திராடம் : ஆதரவான நாள்.
திருவோணம் : கட்டுப்பாடுகள் குறையும்.
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.


கும்பம்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபகாரிய முயற்சிகளில் பொறுமை வேண்டும். உறவினர்களின் ஒத்துழைப்பால் நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அவிட்டம் : சேமிப்பு அதிகரிக்கும்.
சதயம் : பொறுமை வேண்டும்.
பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.


மீனம்

உயர்கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் இருக்கவும். பழைய நினைவுகளின் மூலம் குழப்பங்கள் தோன்றி மறையும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தடைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : மாற்றமான நாள்.
உத்திரட்டாதி : விவேகம் வேண்டும்.
ரேவதி : புரிதல் உண்டாகும்.

6 COMMENTS

  1. அருமை. பக்கத்திற்கு பக்கம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. உங்கள் தினசரி வெற்றிபெற வாழ்த்துக்கள். ஆண்டாள் திருவடிகளே சரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 6 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.