― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஆப்பசைத்த குரங்காக... ஜஸ்டின் ரூடோ!

ஆப்பசைத்த குரங்காக… ஜஸ்டின் ரூடோ!

- Advertisement -
khalistan singh nijjar

— லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் —

ட்ரூடோ எனும் ஒரு அடி முட்டாள் அமெரிக்க எடுபிடி கனடாவில் பிரதமராகப் புடுங்கி வருவது தெரிந்ததே!

மகா அசடன், பொடியன், பேக்கு, ப்ளேபாய், ஆல்கஹாலிக் மெண்டல் என்றெல்லாம் பலரும்- குறிப்பாக வெள்ளை கனேடியர்களே- அவனுக்கு அர்ச்சனை செய்தும் அவன் திருந்தப் போவதில்லை.

சமீப காலமாக அந்த பேக்கு பேவகூஃப் பஞ்சாபிலிருந்து ஓடிப்போன காலிஸ்தானி கிரிமினல் + போதை மருந்து + ஆயுத வியாபாரக் கும்பல்களுடன் கும்மி அடித்துக் கும்மாளம் போடுவது கனடாவின் பெரும் துரதிர்ஷ்டம். ராகூழ் காந்தி இஸ்டைலில் ட்ரூடோவும் அங்கே வோட்டு அரசியல் செய்கிறானாம்!

கனேடிய காலிஸ்தானி கும்பல் கட்டுங்கடங்காமல் போய் ஒவ்வொரு வருஷமும் இந்திய சுதந்திர / குடியரசு தின விழாக்களின் போது அங்கே அடாவடி அராஜகங்கள், அடிதடி செய்வது வழக்கமாகவே போய் விட்டது.

இவர்களை ஒன்றும் செய்யாமல் விஷப் பாம்புகளுக்கு பால் வார்த்து வளர்த்தெடுப்பதில் உள்ள பிந்த்ரன்வாலே பயங்கரங்கள் புரியாத ட்ரூடோவுக்கு ஜெய்ஷங்கர் குழுவினர் ஹிதோபதேசம் செய்து செய்து அலுத்து விட்டனர். பன்னாட்டு அரசியல், உலக அரசியல் புரியாத ட்ரூடோ ஒரு செவிடனும் கூட என்பது நிதர்சனம்.

முட்டாபீஸ்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் பிரயோசனம் இல்லை என்பதை நன்குணர்ந்த மோடி, அஜீத் தோவலை முடுக்கி விட்டார்.

உடனே காலிஸ்தானி பெருந்தலைகள் சில பல ஆங்காங்கே கனடாவில் சீவப்பட்டன. இஸ்ரேல் மொஸாத் ஸ்டைலில் ‘ரா’வும் தன் வேலையை செவ்வனே செய்து முடித்தது. அஃபிஷியலாக நாலு, அன்அஃபிஷியலாக எட்டு சிரசுகள் சீவப்பட்டன என்பது அமெரிக்க CIA வே ஒப்புக்கொள்ளும் அண்டர்கிரௌண்ட் தகவல்.

பயந்து நடுங்கிப்போன காலி(ஸ்தான்) கும்பல் ட்ரூடோவிடம் “குய்யோ முய்யோ, கொன்னுட்டான் சார், கிள்ளிட்டான் சார்” என்று முறையிட, ட்ரூடோ அமெரிக்கப் பெரியண்ணன் பைடனிடம் போய் ஒரு பாட்டம் அழ, பைடன் “டேய் பொடியா, உன்னை யார்ரா பாம்பு புற்றுக்குள்ள கைய விடச் சொன்னது? படு மவனே, படு, என்னால மோடிய பகைச்சுக்க முடியாது, நானே அவருடைய பயங்கர ஃபேன் தெரியுமில்லையா?” என்று கையை விரித்து விட்டார்.

இது இவ்வாறிருக்க, சமீபத்திய டெல்லி G20 மாநாட்டில் கலந்துகொள்ள வந்த ட்ரூடோவை MEA அதிகாரிகள், RAW ஆட்கள், பிரதமரின் தனிச்செயலர்கள் என்று எல்லோரும் போட்டுக் கும்மி எடுத்து ஒரு வழி பண்ணி விட்டார்கள்.

48″ மார்பழகன் மோடி தனியறையில் போட்டு குல்லுகபட்ட குள்ளன் ட்ரூடோவை கும்மாங்குத்து குத்தி எடுத்துக் கொட்டையைப் பிசைந்து விட்டார் என்று நம் டெல்லி ராஜகோபாலர்கள் சூடம் அணைத்து சத்தியம் செய்கிறார்கள்.

சரி, எப்படியாவது டெல்லியிலிருந்து எஸ்கேப் ஆகி விடலாம் என்று பார்த்தால் சொல்லி வைத்தாற்போல் ட்ரூடோவின் கனேடிய விமானமும் ரிப்பேர்! தோவல் யாரையாவது ஏவி விட்டு விமானத்தில் ஃப்யூசைப் பிடுங்கி விட்டாரோ, டயரில் ஸ்க்ரூடிரைவரால் பங்க்ச்சர் செய்து விட்டாரோ என்று கனேடிய காமெடி பீஸ் உளவுத் துறை கையைப் பிசைந்துகொண்டு இரண்டு நாட்கள் காரணம் தேடி நின்றதுதான் மிச்சம்.

Langley, VA வில் CIA போனையே எடுக்கவில்லையாம்.

ஒருவழியாக கனடா திரும்பிய லூசாண்டி ட்ரூடோ, இல்லாத மீசையில் மண் ஒட்டலை என்று சொல்ல நினைத்து, சமீபத்திய கனேடிய காலிஸ்தானி தோஸ்துகளின் அகால மரணங்களின் பின்னால் இந்தியா இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகச் சொல்லி இந்திய தூதரை அங்கேயிருந்து கிளம்பச் சொன்னான்.

யாருகிட்ட?!

உடனே கனேடிய தூதரும் டெல்லியிலிருந்து மோடியால் விரட்டி அடிக்கப்பட்டார்.

அது மட்டுமல்ல. அத்தனை கனேடியக் குடியுரிமை பெற்ற காவாலி காலிஸ்தானிகளின் இந்திய விசாக்கள், PIO, OCI கார்ட்கள் ஒட்டுமொத்தமாக கேன்சல் செய்யப்பட வேலை முடுக்கி விடப்பட்டுள்ளது.

அவர்களது இந்திய சொத்துகள், வீடுகள், வங்கிக் கணக்குகள், வியாபார கேந்திரங்கள் மூடப்படவும், ஜப்தி செய்யப்படவும் உத்தரவுகள் பறந்திருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe
Exit mobile version