Home உரத்த சிந்தனை வெட்கம் கெட்டவர்கள் ..!

வெட்கம் கெட்டவர்கள் ..!

செப்டம்பர் 17 ஈ.வே.ரா பிறந்தநாள்: ஈ.வே.ரா சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் முதல் மாநில மாவட்டம் ஒன்றிய உடன்பிறப்புகள் மாலை அணிவித்தார்களாம்! ஆனால் இவர்களுக்கு எல்லாம் திமுக என்ற கட்சி வரலாறு தெரியுமா ? தெரிந்தாலும் உண்மையை சொல்லுவார்களா ?

அவர்களுக்காக சில கேள்விகள்.. –

70 வயது ஈ.வே.ரா தன் மகள் என கூறி வளர்த்த 30 வயது மணியம்மையை திருமணம் செய்தது 1949 ஏப்ரல் 9.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து ஈ.வே.ரா விடமிருந்து பிரிந்து திமுக தொடங்கப்பட்ட நாள் 1949 செப்டம்பர் 17 …

திமுக தன் கட்சி துவங்கிய நாளை வருடா வருடம் கொண்டாடியது உண்டா ?

ஈ.வே.ரா விடமிருந்து அண்ணாத்துரை ஏன் பிரிந்து வந்து திமுக கட்சியை துவக்கினார் ?

அதற்கு 1949 செப் 18 திராவிட நாடு பத்திரிக்கையில் அண்ணாத்துரை சொன்ன காரணம் என்ன ?

ஈ.வே.ரா வின் சொந்த அண்ணன் மகன் ஈ.வே.கி.சம்பத் (தற்போதைய காங்கிரஸ் பிரமுகர் EVKS இளங்கோவனினன் தந்தை)யும் அண்ணாத்துரையோடு ஈ.வே.ரா வை விட்டு பிரிந்து கட்சி துவக்கிய காரணம் என்ன ?

பின்னாளில் திமுக.,வை குடும்ப கழகமாக்கிய கருணாநிதியும் ஈ.வே.ரா வை வசை பாடி அண்ணாத்துரையோடு கரம் கோர்த்தது ஏன் ?

1957 பொதுத்தேர்தலில் திமுக வுக்கு எதிராக ஈ.வே.ரா பிரச்சாரம் செய்து காங்கிரஸை வெற்றி பெற வைத்து திமுக வை படுதோல்வி அடைய செய்தது ஏன் ?

சொத்துக்களுக்கு வாரிசாக மணியம்மையை ஈ.வே.ரா திருமணம் செய்தார் என்றால்… அன்பு தம்பி (அப்படித்தான் சொல்லிக்கிட்டாங்க) அண்ணாத்துரையை விட்டுவிட்டு…. அண்ணன் மகன் ஈ.வே.கி. சம்பத்தை விட்டுவிட்டு… பெரியாரின் கொள்கை தங்கம் கருணாநிதி யை விட்டுவிட்டு… ஈ.வே.ரா தனது கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு வாரிசாக மணியம்மையை திருமணம் செய்தது ஏன் ?

1949 ம் ஆண்டில் வெளியான ஈ.வே.ரா வின் விடுதலை மற்றும் அண்ணாத்துரையின் திராவிட நாடு பத்திரிக்கை இரண்டிலும் வாண்டை வாண்டையாக ஒருவருக்கொருவர் அள்ளிவீசிய கருத்து மோதல்களை அப்பிடியே வெளியிடுவார்களா ?

ஈ.வே.ரா சிலைக்கு மாலை அணிவிப்போர் இதற்கெல்லாம் பதில் சொல்வார்களா ?

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! – கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
என்ற பாரதியின் வரிகள் தான் ஞாபகம் வருகிறது

  • கா.குற்றாலநாதன் – நெல்லை

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version