Home சமையல் புதிது ஆரோக்கிய சமையல்: வரகரிசி ஆப்பம்!

ஆரோக்கிய சமையல்: வரகரிசி ஆப்பம்!

Screenshot_2020_0811_170245

வரகரசி ஆப்பம்

தேவையானவை:

வரகரிசி. – அரை கப்,

புழுங்கலரிசி மற்றும் பச்சரிசி இரண்டும் சேர்த்து – அரை கப், வெந்தயம். – கால் டீஸ்பூன்,

உளுந்து. – ஒரு டீஸ்பூன்,

இளநீர். – கால் கப்,

துருவிய தேங்காய் – கால் கப்,

சோடா உப்பு – தேவையான அளவு,

சர்க்கரை, ஏலக்காய்த்தூள் – தலா ஒரு சிட்டிகை.

செய்முறை:

பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் களைந்து கொள்ளவும். இக்கலவையுடன் தண்ணீர் விட்டு நன்கு களைந்த வரகரிசியை ஒன்றாகச் சேர்த்து மூழ்குமளவுக்கு நீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிடவும். இதனுடன் தேங்காய் சேர்த்து கெட்டியாக மைபோல் அரைக்கவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து இரவு முழுவதும் வைத்து மறுநாள் காலை இளநீர், சர்க்கரை, சோடா உப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து தோசை மாவைவிட சற்றுத் தளர்வாகக் கரைத்துக்கொண்டு, ஆப்பச் சட்டியில் ஆப்பமாக வார்த்து எடுக்கவும்..

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version